கோஹ்லி(0), கெய்ல்(9), வாட்சன்(1) என முன்னணி வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டிய போதும், தனி ஒருவனாக போராடிய டிவிலியர்ஸ் ‘மின்னல்’ வேக அரைசதம் கடந்து அணியை கரை சேர்த்தார். 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி, ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு
முன்னேறியது. தோற்ற குஜராத் அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருப்பது ஆறுதலான விஷயம்.
இந்தியாவில் ஒன்பதாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த ‘தகுதிச்சுற்று 1’ல், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த குஜராத், பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
குஜராத் அணிக்கு பிரண்டன் மெக்கலம், பின்ச் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. இக்பால் அப்துல்லா வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் மெக்கலம் (1) அவுட்டானார். 4வது பந்தில் பின்ச் (4) வீழ்ந்தார். கேப்டன் ரெய்னா (1) வாட்சனிடம் சிக்க, 9 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.
ஸ்மித் அரைசதம்:
ஜோர்டன், சாகல் பந்துகளில் சிக்சர் அடித்த ஸ்மித், அரைசதம் எட்டினார். தினேஷ் கார்த்திக் (26), ஜடேஜா (3) நிலைக்கவில்லை. ஸ்மித் 73 ரன்னுக்கு (41 பந்து) அவுட்டானார்.
திவேதி (19), பிராவோ (8), குல்கர்னி (10) வரிசையாக திரும்ப, குஜராத் அணி 20 ஓவரில் 158 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜகாதி (1) அவுட்டாகாமல் இருந்தார்.
விக்கெட் மடமட:
பெங்களூரு அணிக்கு துவக்கமே அதிர்ச்சி. குல்கர்னி ‘வேகத்தில்’ கோஹ்லி(0), கெய்ல் (9), லோகேஷ் ராகுல் (0) என, அடுத்தடுத்து சிக்கினர்.
‘சீனியர்’ வாட்சன் (1), ஜடேஜா ‘சுழலில்’ சிக்க, சச்சின் பேபி (0), ஸ்டூவர்ட் பின்னி (21) சொதப்ப, பெங்களூரு அணி 68/6 என, தோல்விப் பாதையில் செல்லத் துவங்கியது.
சபாஷ் டிவிலியர்ஸ்:
பின் டிவிலியர்ஸ், அப்துல்லா இணைந்து துாள் கிளப்பினர். தனி மனிதனாக போராடிய டிவிலியர்ஸ், குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். பவுண்டரி, சிக்சர்களாக விளாசி அரைசதம் எட்டினார். அவ்வப்போது, அப்துல்லாவும் கைகொடுக்க, வெற்றி பெங்களூரு பக்கம் திரும்பியது.
டுவைன் பிராவோ ஓவரில் அப்துல்லா ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாச, பெங்களூரு அணி 18.2 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. டிவிலியர்ஸ் (79 ரன், 47 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), அப்துல்லா (33) அவுட்டாகாமல் இருந்தனர்.
3
பெங்களூரு அணி 2009, 2011 என, இரு முறை ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு முன்னேறிய போதும், டெக்கான், சென்னை அணிகளிடம் தோற்று, கோப்பை வாய்ப்பை இழந்தது. தற்போது மூன்றாவது முறையாக பெங்களூரு அணி, பைனலுக்குள் நுழைந்தது.
19
குஜராத் அணியின் மெக்கலம் நேற்று டிவிலியர்சிடம் ‘பிடி’ கொடுத்தார். இதையடுத்து ஐ.பி.எல்., சீசனில் ஒரு தொடரில் அதிக ‘கேட்ச்’ செய்த வீரர்கள் வரிசையில் டிவிலியர்ஸ் (19) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இதற்கு முன் 2013ல் பிராவோ, 2014ல் மில்லர் தலா 14 ‘கேட்ச்’ செய்ததே அதிகம்.
இன்னொரு வாய்ப்பு
நேற்று பெங்களூருவிடம் தோற்ற குஜராத் அணிக்கு பைனலுக்கு முன்னேற இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்றைய ‘எலிமினேட்டர்’ போட்டியில் வெல்லும் அணியுடன், 2வது தகுதிச்சுற்றில் (மே 27) குஜராத் மோத வேண்டும். இதில் வெல்லும் அணி பைனலுக்கு (மே 29) செல்லும்.

கருத்துரையிடுக