விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம் படத்தில் நடித்து வந்தபோது கீர்த்தி சுரேஷ்க்கு கமிட்டான படம்தான் பாம்பு சட்டை. பாபிசிம்ஹா நாயகனாக நடித்து வந்த அந்த படத்தை ரொம்பவே
எதிர்பார்த்தார் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் ஏமாற்றி விட்டபோதும் இந்த பாம்பு சட்டை கட்டாயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதன்பிறகு அவர் ரஜினிமுருகன் படத்தை அடுத்து தொடரி, ரெமோ, விஜய்யின் 60-வது படம் என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது வரை பாம்பு சட்டை வெளியாகாமல் கிடப்பில் கிடக்கிறது.
காரணம், அந்த படத்தில் சரத்குமார், ஸ்டீபன் ஆகியோர் தயாரிப்பாளர்களாக இருக்க, நடிகர் மனோபாலா முதல் காப்பி அடிப்படையில் அந்த படத்தை தயாரித்து வந்தார். ஆனால், நடிகர் சங்க தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அந்த படத்திற்கு சரத்குமார் தரப்பில் இருந்து பைனான்ஸ் வரவில்லையாம். அதனால், அப்படத்தை டப்பிங் வரை கொண்டு வந்துவிட்ட மனோபாலாவினால் மேற்கொண்டு படத்தை நகர்த்த முடியவில்லையாம். அதனால் பாம்பு சட்டை எப்போது வெளியாகும் என்றே தெரியாமல் கிடப்பில் கிடக்கிறது.
இதுபற்றி கீர்த்தி சுரேஷைக் கேட்டால், பாம்பு சட்டை நல்ல படம். அதில் ஏழை பெண்ணாக நடித்திருக்கிறேன். அதோடு எனக்கான டப்பிங் கூட பேசிக்கொடுத்து விட்டேன். ஆனால் அப்படம் இன்னும் வெளியாகாதது எனக்கு வருத்தமாக உள்ளது. மேலும், முதலில் அந்த படத்தை ரொம்பவே எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது சில முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதால் கிட்டத்தட்ட பாம்பு சட்டையை மறந்தே விட்டேன். ஆனாலும் அந்த படம் சீக்கிரமே வெளியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார்.

கருத்துரையிடுக