பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் சுபிக்ஷா. அதன்பிறகு நினைத்தது யாரோ, ரா ரா ராஜசேகர் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது விஜய்மில்டன்
இயக்கும் கடுகு படத்தில் நாயகனாக நடித்து வரும் டைரக்டர் இராஜகுமாரனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் புலிவேசம் போட்டு வீதிகளில் ஆடும் வேடத்தில் நடித்துள்ள இராஜகுமாரனின மனைவியாக இந்த சுபிக்ஷா நடித்திருக்கிறார்.
இதுபற்றி சுபிக்ஷா கூறுகையில், தமிழில் பாரதிராஜாவின் அறிமுகமாக இருந்தபோதும் நான் எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்கவில்லை. அதனால் மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் பரவலாக நடித்து வருகிறேன். ஆனால் தமிழில் முன்னணி நடிகை என்ற இடத்துக்கு வர வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக தொடர்ந்து சென்னையில் முகாமிட்டு புதிய படங்களுக்கான முயற்சியில் ஈடுபட்டபோதுதான கடுகு படவாய்ப்பு கிடைத்தது. இதில் சிறிய வேடம் என்றபோதும் அழுத்தமான காட்சிகளில் நடித்திருக்கிறேன். இந்த படம் வெளியாகும்போது கண்டிப்பாக நான் கோலிவுட்டில் கவனிக்கப்படும் நடிகையாவேன் என்று கூறும் சுபிக்ஷா, டிராவிங் பிளட் என்றொரு ஆங்கில படத்திலும் நடித்திருக்கிறாராம்.

கருத்துரையிடுக