சீன் பை சீன் அதிரடி ஐஸ்வர்யா

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, ஹலோ நான் பேய் பேசுறேன், ஆறாது சினம், மனிதன் உள்பட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். உதயநிதியுடன் அவர் நடித்த மனிதன் படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் அரை
டஜன் படங்களுக்கு மேல் வெளியாக வேண்டியுள் ளது. இந்த நிலையில், டாடி என்றொரு இந்தி படத்திலும் கதாநாயகியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இதுவரை நடிகர்களின் பெயரைக்கேட்டதும் அந்த படங்களில் நடிக்க கால்சீட் கொடுத்து வந்தார். ஆனால் இப்போது அப்படி செய்வதில்லை. முதலில் சீன் பை சீன் கதையை சொல்லுங்கள். கதையும், எனக்கான கேரக்டரும் பிடித்திருந்தால் கால்சீட் தருவது பற்றி யோசித்து சொல்கிறேன் என்கிறார்.

அந்த வகையில், தற்போது பத்து கதைகளுக்கு மேல் கேட்டு வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த கதைகளை சொன்ன டைரக்டர்களிடம் கதையில் உள்ள ஒவ்வொரு கேரக்ட ரைப் பற்றியும் துருவி துருவி கேட்டறிந்ததோடு, தனக்கான கேரக்டர்களில் வலுவானதாக இல்லாதபட்சத்தில் காக்கா முட்டை ஐஸ்வர்யாவுக்கு ஏற்ற வேடம் போல் இல்லையே என்று சொல்லி தனது கேரக்டருக்கும் கதையில் முக்கியத்து வம் இருப்பது போன்று மாற்றச்சொல்கிறாராம். அப்படி மாற்றியமைத்தால் மட்டுமே கால்சீட் என்றும் கண்டிசனாக சொல்கிறாராம். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த திடீர் மாற்றம் கண்டு கோலிவுட் டைரக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget