மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் 2வது சர்வதேச யோகா தினம், இந்த ஆண்டு வருகிற ஜூன் 21ந் தேதி சண்டிகரில் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள பிரபல
ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸை அழைத்து வர தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. யோகாவை உலக அளவில் பிரபலப்படுத்த ஜூலியாவை வரவழைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
“பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜூலியா ராபர்ட்ஸ் தினமும் யோகா செய்யக்கூடியவர். அவர் முறைப்படி யோகா கற்றவர். யோகாவின் பெருமைகளை அவ்வப்போது கூறி வருகிறவர். அவர் சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொண்டால் யோகா சர்வதேச கவனம் பெறும் யோக இந்தியாவில் தோன்றிய கலை என்பதை உலகம் உணரும். இதற்காக அமெரிக்க தூதரகம் மூலம் ஜுலியாவை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யோகாவில் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள். பிரபலங்கள் என 500 பேர் கலந்து கொள்கிறார்கள் என மத்திய சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக