வித விதமான செல்பி

செல்ஃபிக்களும் தெரியும், ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரை செல்ஃபி மோகம் பிடித்து ஆட்டிப் படைப்பதும் தெரியும். ஆனால் செல்ஃபியில் எத்தனை ரகங்கள் இருக்கின்றன
என்று தெரியுமா? இந்தக் கேள்விக்கான பதிலை இன்போகிராபிக் எனப்படும் அழகான வரைபடச் சித்திரமாக அளிக்கிறது மைபிரெஸ்ட் இணையதளம்.

செல்லப் பிராணியாக வளர்க்கும் நாயுடன் எடுத்துக்கொள்ளும் டெலிபி, குழந்தை பிறந்து பிறகு எடுத்துக்கொள்ளும் பர்த்தி, நட்சத்திரங்களின் செல்ஃபி மற்றும் முகம் மாற்றி வெளியிடும் செல்ஃபி மற்றும் குழுவாக எடுத்துக்கொள்ளும் குரூப்பி ஆகிய ரகங்களைச் சுட்டிக்காட்டுகிறது, குறிப்பிட்ட செயலின் அடிப்படையிலான செல்ஃபிக்களையும் இந்த வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.

அப்படியே மேக்கப் இல்லாத செல்பி, விவசாயிகளின் செல்ஃபி, பணக்காரர்களின் செல்ஃபி ஆகியவற்றைப் பற்றி விளக்கம் அளித்து, குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குப் பின் எடுக்கப்படும் செல்ஃபிக்களையும் வகைப்படுத்துகிறது. ஸ்மார்ட்போன் தவிர செல்ஃபி எடுக்க மாற்று வழிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

செல்ஃபிகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தக்கூடிய இந்த வரைபடத்தின் முக்கிய அம்சம், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விபரீத செல்ஃபி பழக்கங்களையும் அடையாளம் காட்டி எச்சரித்திருப்பதுதான்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget