கோலிவுட் அழகு புயல் ஆஷ்ரிதா

சுசீந்திரனின் உதவியாளர் நாகராஜ் இயக்கும் படம், ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’. கவித்துவமான பெயரில் காதல் காமெடி படத்தை இயக்கி இருக்கிறார். ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’
கொஞ்சம் பழைய தலைப்பா இருக்கே என்றால் நிமர்ந்து உட்கார்கிறார்.‘‘உலகத்துலயே பழமையான விஷயம் காதல். அதை எப்படி புதுசா சொல்றோம் என்பதுதான் முக்கியம். ஹீரோயின் பெயர் அமுதா. ஹீரோவுக்கு அவள் ஒருத்திதான் அழகாகத் தெரிகிறாள். ஹீரோவோட பார்வையில வச்சிருக்கிற டைட்டில் இது.

வட சென்னையினாலே ரத்தம், வன்முறைன்னுதான் சினிமா காட்டியிருக்கு. அங்கேயும் மண்வாசனை குறையாத காதல் இருக்கு. வியாசர்பாடிதான் கதை களம். ஒரே தெருவுல இருக்கிற ஹீரோவுக்கு அமுதா மீது காதல். முதல் காட்சியில் தன் காதலை சொல்கிறான். அவள் ஏற்கவில்லை. போலீசுக்கு போகிறாள். ரவுடியிடம் போகிறாள். அப்படி வெறுக்கும் அவள் இறுதியில் தன்காதலைச் சொல்கிறாள். இடையில் என்ன நடக்கிறது என்பதை காமெடி கலந்து சொல்கிறேன்.

கதையை ஒரு வரியில் சொல்லிவிட முடியும். காட்சியும், வசனங்களுமே படத்திற்கு பலம். அதை தெளிவாகச் செய்திருக்கிறேன்.

ஹீரோ ரிஜன் சுரேஷ் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயின்றவர். ஆஷ்ரிதா ‘ஆரஞ்சு மிட்டாயி’ல் நடித்தவர். இருவரையும் ஆடிசன் வைத்துதான் தேர்வு செய்தோம். பிறகு இருவரையும் வியாசர் பாடியில் சுற்ற வைத்து பயிற்சி கொடுத்து அவர் களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரியை உருவாக்கியபின்னர்தான் படப்பிடிப்புக்கே சென்றோம். ‘பட்டிமன்றம்’ ராஜா, மகாநதி சங்கர், வளவன் மாதிரியான தெரிந்த முகங்களும் இருக்கிறார்கள்...’’ என்கிற நாகராஜிடம், ‘படம் சொல்லும் காதல் மெசேஜ் என்ன?’ என்றோம்.‘‘ஒரு பெண்ணை விரும்பிட்டீங்கன்னா. அந்த பொண்ணு உங்க காதலை நிராகரிச்சாலும், தொடர்ந்து அந்த பெண்ணை விரும்புங்க. ஏதோ ஒரு இடத்துல காதல் பூக்கும். அது எந்த இடம், எந்த விஷயம்னு நீங்க முடிவு பண்ண முடியாது. காதல்தான் முடிவு பண்ணும்னு சொல்றோம்...’’ என்கிறார். சரிதான்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget