உங்கள் சருமத்தை பற்றி அறிவீர்களா

சருமம் பற்றிய புரிதல் அதிகம் இல்லாமல், நம்மில் பலர் இருக்கின்றனர். வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, மூன்று வகைகளாக இருக்கிறது நம் சருமம். மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமத்துக்கான
பிற பொருட்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

மென்மையான சருமம்: மென்மையான சருமத்தினரை அதிகம் பாதிப்பது எதுவென்றால், சருமம் எளிதில் சிகப்பாக மாறுவது, மாய்ச்சரைசர்கள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் சருமத்தில் எதிர் விளைவுகள் உண்டாவது, சூரிய வெப்பத்தால், பாதிப்புக்கு உள்ளாவது, வெப்பம், குளிரில் விரைவாக பாதிக்கப்படுவது ஆகியவற்றை சொல்லலாம். இவர்கள், அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை, போதியளவு குறைக்க வேண்டும். வாசனையற்ற, கிளென்சிங் மூலம் சருமத்தை சுத்தப்படுத்திய பின், மாய்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். 
அழகு சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு முன், சரும நிபுணரிடம் கேட்டறிவது நல்லது. பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் ஆகியவை மென்மையான சருமத்தினருக்கு சிறந்தது.

சரும பாதுகாப்புக்கான ஆலோசனைகள்
பவுடர் மேக்-அப் பயன்படுத்துவது நல்லது. திரவ பவுண்டேஷன் பயன்படுத்தினால், சிலிக்கானை அடிப்படையாக கொண்ட பவுண்டேஷனை பயன்படுத்துவது சருமத்துக்கு நல்லது. கண்களுக்கான அழகுப் பொருட்களில், பழைய பொருட்களை பயன்படுத்தக் கூடாது. பவுண்டேஷன் மற்றும் லிப்ஸ்டிக்கை, ஓராண்டு வரை பயன்படுத்தலாம். மஸ்காராவை, மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையே பயன்படுத்த வேண்டும். 
முகப்பவுடரை இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். மேக்-அப் பிரஷ் மற்றும் ஸ்பான்ஜ்களை அடிக்கடி முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பென்சில் ஐ லைனர், மெழுகை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுவதோடு, அவற்றில் பதப்படுத்தும் பொருள் குறைவாகவே சேர்க்கப்படுகிறது. இதனால், பென்சில் ஐ லைனர் பயன்படுத்துவது நல்லது. திரவ ஐ லைனரில், சேர்க்கப்படும் லேட்டக்ஸ், மென்மையான சருமத்தை உடைய சிலருக்கு, ஒவ்வாமையை தோற்றுவிக்கலாம். 
அதிகபட்சமாக, 10 பொருட்கள் மட்டுமே சேர்த்து தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதே சாலச்சிறந்தது. எந்த ஒரு புதிய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பும், முறையான சோதனை செய்ய வேண்டும். மென்மையான சருமத்தினர் ஒரு நாளைக்கு, மூன்று முறைக்கு மேல் அடிக்கடி முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவினால், தோலில் இயற்கையாக காணப்படும் எண்ணெய் தன்மை போய்விடும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget