கூகுளுக்கு சவால் விடும் புத்தம் புது தேடு பொறி

கூகுள் தேடியந்திரத்தில் தகவலை தேடுபவர்களில், 90 சதவீதம் பேர் கூகுள் காட்டும் முதல் பக்கத்தை தாண்டி செல்வதில்லை. அதில், 50 சதவீதம் பேர், கூகுள் காட்டும் முதல் இரண்டு அல்லது மூன்று இணையதளங்களை மட்டுமே கிளிக் செய்கின்றனர்.
இணையத்தில், 70 சதவீதம் பேர் கூகுளை மட்டுமே தேடியந்திரமாக பயன்படுத்துகின்றனர்.

இணைய தேடியந்திர துறையில் கூகுள் காட்டுவதே சிறந்த தகவல் என்பதில்லை என்று சொல்பவர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர், சஞ்சய் அரோரா. இவர், அமெரிக்காவில் குடியேறிய இந்தியர். ''மிகப் பிரபலமான தளங்கள் திடீரென்று காணாமல் போய்விட்டால், இணையம் எப்படி இருக்கும் என்று ஒரு நாள் யோசித்தேன். அதன் விளைவாக உருவானது தான் எங்கள் 'மில்லியன் ஷார்ட்' என்ற தேடியந்திரம்'' என்கிறார் சஞ்சய். இவரது 'எக்ஸ்பொனென்ஷியல் லேப்ஸ்'நிறுவனம் உருவாக்கியுள்ள மில்லியன் ஷார்ட் (millionshort.com) தளம், தகவல் தேடுவோருக்கு கூகுள் தரும் முதல், 10 லட்சம் முடிவுகளை வடிகட்டி, அதற்கு அப்பாலுள்ள விடைகளையே காட்டுகிறது.

பிரபலமாக இருக்கும் இணையதளங்களுக்கு அப்பால், நிறைய நல்ல தளங்கள் இருக்கின்றன. அவற்றால் கூகுளின் முதல் சில பக்கங்களுக்குள் வரமுடியாத ஒரே காரணத்தால் அவை மக்களின் கவனத்திற்கு வராமலேயே போய்விட வாய்ப்பு இருக்கிறது.

அந்த நிலையை மாற்றி, அந்த நல்ல தளங்களும் பிரகாசிக்க ஒரு வாய்ப்பை தருகிறது மில்லியன் ஷார்ட். நீங்களும் அடுத்த முறை இந்த தளத்தை முயற்சித்துப் பாருங்கள். உங்களுக்கு இதுவரை காணக்கிடைக்காத புதிய தளங்கள் கிடைக்கும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget