டிசைனர் சேலை அறிய வேண்டிய தகவல்

இரண்டு வருடங்களுக்கு முன்பு டிசைனர் சேலை ஃபேஷனில் இருந்தபோது நிறைய வாங்கி விட்டேன். இப்போது அவற்றை உடுத்தப் பிடிக்கவில்லை. எல்லா சேலைகளும் புத்தம்
புதிதாக உள்ளன. அவற்றை வேறு ஏதேனும் உபயோகத்துக்கு மாற்றிக் கொள்ள முடியுமா?

ஃபேஷன் டிசைனர் ஃபரா

உங்களிடமுள்ள டிசைனர் சேலைகளை சல்வார் செட்டாக, லாச்சா செட்டாக, லெஹங்கா சோளிகளாக, அழகான கவுன்களாக... இன்னும் எப்படி வேண்டுமானாலும் தைத்துக் கொள்ளலாம். இவற்றை வைத்து வீடுகளுக்கு திரைச்சீலைகள், குஷன் கவர்கள்கூட தைக்கலாம். கொஞ்சம் ஆடம்பரமாகவும் தெரியும்.

பிராகேட் புடவைகளை திவான் தலையணைகளை டிசைன் செய்யப் பயன்படுத்தலாம். கொஞ்சம் கிழிந்தோ, ஓரங்கள் பிய்ந்தோ காணப்படுகிற சேலைகளை டிசைனர் துப்பட்டாக்களாக மாற்றிக் கொள்ளலாம். தனியே அது போன்ற துப்பட்டாக்களை வாங்க நீங்கள் அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்குப் பதில் செலவே இல்லாமல் இரண்டு, மூன்று துப்பட்டா கூட டிசைன் செய்து கொள்ளலாம்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget