வலிப்பு வரும் முன் கண்டறிய வேண்டுமா

வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு, வலிப்பு எப்போது வரும் என்பது தெரியாது. யாரும் இல்லாத இடத்தில், குளியலறையில், வலிப்பு வரும்போது, அவர்களுக்கு முதலுதவி செய்வது கடினமாகி
விடுகிறது. இயந்திரங்களுக்கு அருகே வேலை செய்கையில் வலிப்பு வந்தால் உயிருக்கே ஆபத்து நேரலாம். ஒருவருக்கு வலிப்பு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஜெர்மனியிலுள்ள பான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதற்கென, 'எபிடெக்ட்' (EPItect) சாதனத்தை உருவாக்க ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். வலிப்பு நோய் உள்ளவர்கள் எபிடெக்டை காதில் பொருத்திக் கொள்ளவேண்டும். எபிடெக்டை இயக்க, மொபைலில் ஒரு செயலியும் இருக்கும். வலிப்பு வருவதற்கான அறிகுறிகள் மூளையில் ஏற்பட ஆரம்பித்ததுமே, எபிடெக்டில் உள்ள உணர்வான்கள் கண்டறிந்து, நோயாளிக்கு தெரிவிப்பதோடு, அவரது மொபைலில் உள்ள வேண்டப்பட்ட சிலரது எண்களுக்கு தானே குறுஞ்செய்தியையும் அனுப்பிவிடும். இதனால், வலிப்பு நோயாளிக்கு உடனடி முதலுதவியையும், விரைவில் மருத்துவ உதவியையும் பெற முடியும்.

மருத்துவமனைகளில் வலிப்பு நோயாளிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படும், 'எலெக்ட்ரோ என்செபலோ கிராபி' என்ற இயந்திரத்தின் அடிப்படையில்தான் எபிடெக்ட் இயங்குகிறது. ஆனால், அத்தனை பெரிய இயந்திரத்தை, காதில் பொருத்துமளவிற்கு மினியேச்சர் வடிவில் செய்வதுதான் விஞ்ஞானிகள் முன் உள்ள சவால்.வலிப்பு நோயாளி களுக்கு பாதுகாப்பு தருவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஜெர்மனி அரசு, பான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்கு 20 லட்சம் யூரோக்களை ஆய்வு நிதியாக தந்துள்ளது. ஏற்கனவே எபிடெக்டின் மாதிரி வடிவத்தை ம்யூனிச் நகரிலுள்ள கோசினஸ் ஜி.எம்.பி.எச்., என்ற நிறுவனம் பான் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இது சந்தைக்கு வந்தால், வலிப்பு நோயாளிக்கு பாதுகாப்பும் சுதந்திரமும், அவரது குடும்பத்தாருக்கு நிம்மதியும் கிடைக்கும். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget