ஆண்ட்ராய்ட் வரிசையில் மைக்ரோ மேக்ஸ்

இந்தியாவிலேயே விதைக்கப்பட்டு, முளைத்து வளர்ந்த மொபைல் கம்பெனி மைக்ரோ மேக்ஸ். 'எக்ஸ் மென்' புகழ் ஹாலிவுட் நடிகரை, விளம்பரத்தில் நடிக்கவைத்து, துாள் கிளப்பியது போல, மைக்ரோ மேக்ஸ் தன் இயங்கு தள விஷயத்திலும் துணிச்சலாக, சைனோஜென்
ஓ.எஸ்.,' என்ற இயங்கு தளத்தையே பயன்படுத்தியது. அவ்வளவு ஏன், ஒரு படி மேலே போய், சைனோஜென் இயங்கு தளத்தை இந்தியாவில் மைக்ரோ மேக்ஸ் மட்டுமே பயன்படுத்தும் என்கிற அளவுக்கு ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால், சைனோஜென் மென்பொருளில் சில குளறுபடிகள் அவ்வப்போது தலைகாட்டி வந்தது. இதனால் மைக்ரோ மேக்சின் யுரேகா, யுரேகா பிளஸ், யுடோபியா போன்ற பிரபல மொபைல் மாடல்களின் வாடிக்கையாளர்கள், இது பற்றி அதிருப்தியை வெளியிட்டு வந்தனர். சமீபத்தில் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மைக்ரோ மேக்சின் தலைவர் ராகுல் சர்மா, 'இனி யு வரிசை மொபைல்களில் சைனோஜென் இயங்கு தளம் பயன்படுத்தப்படாது. அதற்கு பதிலாக ஆண்ட்ராய்ட் இயங்கு தளமே பயன்படுத்தப்படும்' என்று தெரிவித்தார். ஆண்ட்ராய்ட் இயங்குதளம் பிரபலமாக இருப்பதால், மைக்ரோமேக்சின் யு வரிசை மொபைல்கள் அதிகம் பேரை ஈர்க்கும் என்று ராகுல் சர்மா நம்புகிறார். நாமும் நம்புவோம்! 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget