குத்தாட்டம் கோதாவில் தீபிகா

பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டிலும் காலூன்றி இருக்கும் நடிகை தீபிகா படுகோனே, ஹாலிவுட் நடிகர் வின் டீசலுடன் XXX-தி ரிட்டர்ன் ஆப் ஜேண்டர் கேஜ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் தீபிகாவின் போர்ஷன் முடிந்துவிட்டதால் பாலிவுட்டில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் தீபிகா. இதனிடையே, பாலிவுட்டில் அறிமுக இயக்குநர் தினேஷ் விஜன், 'ராப்தா' என்ற படத்தை இயக்குகிறார். இதில் சுசாந்த்சிங் ராஜ்புட்டும், கிருத்தி சனோனும் நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒரு குத்தாட்டம் ஒன்று இடம் பெறுகிறது. இதில் தீபிகாவை நடிக்க வைக்க இயக்குநர் தினேஷ் விஜன் விரும்ப, அதன்படி தீபிகாவிடம் பேசியிருக்கிறார். அதற்கு தீபிகாவும் சம்மதம் சொல்லிவிட்டார். இதையடுத்து விரைவில் இந்த குத்தாட்ட பாடல் படமாக்கப்பட இருக்கிறது.

ஹீரோயினாக நடித்து வந்தாலும் பாலிவுட் நடிகைகள் குத்தாட்ட வாய்ப்பை மறுப்பதில்லை. ஏற்கனவே, தீபிகா 2011ம் ஆண்டு 'தம் மாரோ தம்' படத்தில் குத்தாட்டம் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget