புதுமையான கவர்ச்சி ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தமிழ் தவிர மற்ற இரண்டு
மொழிகளிலும் நடிப்புடன் கூடிய கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். படங்களில் மட்டுமல்லாது சில ஆங்கில இதழ்களின் அட்டை பக்கத்தில் கவர்ச்சியாகவும் போஸ் கொடுக்கிறார். சமீபத்தில் கூட ஒரு ஆங்கில இதழின் அட்டை பக்கத்தில் ஸ்ருதியின் கவர்ச்சி படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், இதுப்பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ''நடிகைகள் கவர்ச்சியை மட்டும் நம்பி சினிமாவில் நீடிக்க முடியாது. கவர்ச்சியுடன் கூடிய திறமையும் வேண்டும். நான் கவர்ச்சியாக இருக்கிறேன், அதனால் எல்லோருக்கும் கவர்ச்சியாக தெரிகிறேன். புதுமையாக யோசிப்பது கூட கவர்ச்சி தான். கவர்ச்சியில் ஒரு எல்லை வைத்திருக்கிறேன், அதை கண்டிப்பாக மீற மாட்டேன், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசன், தற்போது தன் அப்பா கமலின் 'சபாஷ் நாயுடு', சிங்கம் மூன்றாம் பாகமான எஸ்-3 மற்றும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget