ஆனந்த கலக்கத்தில் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடித்த படம் வெளியே வராது என்ற பேச்சு இருந்தது திரையுலகில். அதற்கு ஏற்றார்போல் அவர் நடித்த பாம்புசட்டை, ரஜினி முருகன் படங்கள் வருடக்கணக்கில் முடங்கிக்கிடந்தன. இவற்றில் ஒருவழியாக ரஜினி முருகன் படம் தியேட்டருக்கு வந்துவிட்டது. பாம்பு
சட்டை படம் இன்னமும் பெட்டிக்குள் கிடக்கிறது. இதனால் ராசியில்லாத நடிகை என்ற லேபில் கீர்த்தி சுரேஷ் மீது குத்தப்பட்டது.

இந்நிலையில், 'ரஜினி முருகன்' படம் வெளியாகி வெற்றியடைந்ததால் தப்பித்தார். தற்போது 'தொடரி', 'ரெமோ', படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் 'விஜய்யின் 60 ஆவது படத்திலும் நடித்து வருகிறார். இவற்றில் தனுஷுடன் இணைந்து நடித்திருக்கும் 'தொடரி' படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் 6-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வரும் 'ரெமோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தீம் மியூசிக்கும் ஜூன் மாதம் 9-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மூன்று நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து, தான் நடிக்கும் இரண்டு படங்களின் பாடல்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதை எண்ணி மகிழ்ச்சியில் இருக்கிறார். அதே நேரம் இரண்டு படத்தின் ரிசல்ட்டும் எப்படி இருக்கும் என்று உள்ளூர கலக்கத்திலும் இருக்கிறாராம். தொடரி, ரெமோ படங்கள் கீர்த்தி சுரேஷின் பயத்தைப் போக்குமா?!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget