இனி நான் ஹீரோயினி மனோசித்ரா

'அவள் பெயர் தமிழரசி' படத்தில் அறிமுகமானவர் மனோசித்ரா. கேரளத்திலிருந்து வந்த தேவதை அல்ல, இவர் நம்ம காஞ்சிபுரத்து பொண்ணு. சுத்தமான தமிழ் பெண் என்பதால் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை போலும், பெரிய
போராட்டத்துக்கு பிறகு 'நீர்பறவை' படத்தில் பத்திரிகை நிருபராக நடித்தார், 'வீரம்' படத்தில் அஜீத் தம்பியின் காதலியாக சிறிய கேரக்டரில் நடித்தார். அதன் பிறகும் அதே மாதிரியான சிறிய வேடங்கள் மட்டுமே வர நடிப்பதை தவிர்த்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு 'நேற்று இன்று' படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் தோல்வி அடையவே அதன் பிறகும் அவருக்கு வாய்ப்பு கிடைக்வில்லை.

இனி ஹீரோயினாகத்தான் நடிப்பது என்ற முடிவு செய்து, காத்திருந்தார். அதற்கு பலன் கிடைத்தது. அவர் நடித்து முடித்துள்ள 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்', 'மிரண்டவன்' படங்கள் வெளிவர இருக்கிறது. தற்போது 'நாட்டுக்கொடி', 'அந்தமான்' படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். “அஜீத் படம் என்று ஆசைப்பட்டு சிறிய கேரக்டரில் நடித்தது என் தவறு இனி ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்கிற மனோசித்ரா அந்தமான் படத்தில் அஜீத் மச்சான் ரிச்சர்ட் ஜோடியாக நடிக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget