திருமணமா அ ஆ சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இன்று ஒரு செய்தி வெளியானது. ஆனால், அதில் எதுவும் உண்மையில்லை என சமந்தா தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா திருமணம் பற்றி வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் கட்டுக் கதையே. திருமணம் பற்றி எந்த ஒரு மீடியாவிடமும் சமந்தா பேசவில்லை. தற்போதைக்கு சமந்தா அவருடைய பணிகளில் பிஸியாக இருக்கிறார். சீக்கிரத்தில் அவருக்குத் திருமணம் நடக்கும் என்பதெல்லாம் கற்பனையே. அப்படி திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் வந்தால் சமந்தா அதை முறைப்படி அனைவருக்கும் அறிவிப்பார் என சமந்தா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் இப்போதுதான் அடுத்தடுத்து 'தெறி, 24' என சமந்தா நல்ல பெயரை வாங்கிக் கொண்டு வருகிறார். தெலுங்கில் 'பிரம்மோற்சவம்' கைவிட்டாலும், 'அ ஆ' படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். இப்படியிருக்க சமந்தா பற்றிய திருமணச் செய்திகள் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.

பலமுறை இப்படி சமந்தாவின் திருமணம் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளிவந்துள்ளன. ஆனால், கடைசியில் அவை அனைத்தும் வதந்தியாகவே அமைந்தன. இந்த முறையும் சமந்தா பற்றி அப்படி ஒரு வதந்தியை வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள் என சமந்தா தரப்பிலிருந்து குற்றம் சாட்டுகிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget