சுட்ட பழம் சுடாத பழம் சினிமா விமர்சனம்

குழந்தை கடத்தலை மையமாக கொண்டு வெளி வந்திருக்கும் காமெடி படம்.

ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு வசதியும், திமிரும், நிரம்பிய தொழில் அதிபருக்கும், ஒரு ஏழை ஆட்டோ டிரைவருக்கும் ஒரே நாளில் அடுத்தடுத்து
பிறக்கும் ஆண் குழந்தைகள் பெற்றோர் மாறி ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின் பள்ளிபருவத்தில் தொழில் அதிபரின் தொழில் எதிரி ஒருத்தர், அவரது மகனை கடத்த திட்டம் போட்டு சில குழந்தை கடத்தல் பேர்வழிகளை கூட்டு சேர்த்து பணம் கொடுத்து ஏவி விடுகிறார்.

அந்த கும்பலின் கூட்டு கடத்தலிலும் ஆள்மாறாட்டம் ஏற்பட, தொழில் அதிபரின் மகன் என நினைத்து ஆட்டோ டிரைவரின் மகன் கடத்தப்படுகிறான். அவனை விடுதலை செய்ய ஒரு கோடி பிணையத் தொகை கேட்கப்படுகிறது. காமெடி கடத்தல் கோஷ்டியையும், அவர்களது மூளையையும் போலீஸ் பிடித்ததா? தொழில் அதிபரின் நிஜமான பிள்ளை அவருக்கு கிடைத்தானா? ஆட்டோ டிரைவரின் நிலை என்ன..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், காமெடியாகவும் விடை சொல்கிறோம் பேர்வழி... என ரசிகளை விரட்டி, விரட்டி கடித்திருக்கிறது சுட்ட சுடாத பழம் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் மொத்தமும்.

அறிமுகநாயகர் ராஜா, நடிகர் ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார். ரசிகன் தான் சோர்ந்து போகிறான் பாவம்.

அவர் ஜோடியாக காஷ்மீராவும் கடத்தப்பட்ட நாயகியாக கலக்கலாக, கலர்புல்லாக வந்து போகிறார்.... என்பது ஆறுதல் .

அபிநயஸ்ரீயின் ஒத்தப் பாட்டு குத்தாட்டமும் அப்படியே.

தொழில் அதிபர் ஆர்.செல்வனாக இப்படத் தயாரிப்பாளர் ஆர்.செல்வனும், ஆட்டோ டிரைவராக மது மாறனும் அளவுக்கு அதிகமாக நடித்து சினிமாவை டிராமா ஆக்கி விடுகின்றனர். செல்வனின் மனைவியாக வரும் லதா ராவ். வாவ்!

பவர்ஸ்டார் சீனிவாசன், ரோபோ சங்கர், பயில்வான் ரங்கநாதன், கிங்காங், வடிவேல் பாலாஜி, லொள்ளு உதய், சுருளி மனோகர் என ஏகப்பட்ட காமெடி நட்சத்திரங்கள் இருந்தும் ரசிகனுக்கு சிரிப்பு மட்டும் ம் கூம் வரவே மாட்டேங்கிறது.. என்பது இப்படத்தின் பெரும் பலவீனம்.

கார்த்திக் ஆச்சார்யாவின் பாடல்கள் இசை, கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசை, ஆர்.ஹெச்.அசோக்கின் ஒளிப்பதிவு, ஜெ.இளங்கோவின் படத்தொகுப்பு.... எல்லாம் இருக்கிறது. இருக்கும் இடம் தெரியாமல்!

சிவா.ஜியின் எழுத்து, இயக்கத்தில் படத்தில் கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யம், நடிகர் ராஜா, நடிகை காஷ்மிராவின் காதலும், அவர்கள் கடத்தப்படும் எபிசோட்டும் தான் மழை பெய்யும் ஒர் இரவில் ஆரம்பமாகும் இப்படக்கதையும், அந்த காட்சிப்படுத்தல்களும் ரசனை.

அது மாதிரி, பிறந்த குழந்தைகள் மாறியது அவர்கள் சற்றே பெரியவர்கள் ஆனதும் தொழில் அதிபரின் வெளிநாட்டு நண்பராக வரும் ஷியாம் கணேஷின் மூலம் தெரியவரும் எதிர்பாரா திருப்பம் உள்ளிட்டவை இப்பட இயக்குனர் சிவா.ஜி.யின் இயக்கத்தில் சற்றே சுவாரஸ்யம்!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget