ரம்யா வழியில் சுஜா வருணி

தமிழ் படங்களில் ஒரு பாட்டு நடனம் ஆடி வந்த சுஜா வருணீ, சமீபகாலமாக அதிலிருந்து விடுப்பட்டு கேரக்டர் நடிகையாக உருவெடுத்து இருக்கிறார். அண்மையில் வெளியான பென்சில்
படத்தில் ஜீ.வி. பிரகாஷ் - ஸ்ரீதிவ்யா படிக்கும் பள்ளியில் ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறார்.

இதுப்பற்றி சுஜா வருணி கூறும் போது... "எனக்குப் புலம்பும் எண்ணமும் இல்லை. ஆதங்கமும் இல்லை. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்படும் குணமும் எனக்கு இல்லை. நான் இப்போது நல்ல பார்முக்கு வந்து இருக்கிறேன். வருகிற வாய்ப்புக்கு முழு அர்ப்பணிப்பு தர நான் தயாராக இருக்கிறேன். பென்சில் படத்தில் நான் கதாநாயகி இல்லை என்றாலும் படம் முழுக்க வருவேன். கதையில் சஸ்பென்ஸ் முடிச்சில் என் கேரக்டர் இருக்கும். அதைப் பார்த்த பலரும் என்னிடம் அன்புடன் விசாரித்து பேசுகிறார்கள்.

சினிமாவில் என் ரோல் மாடல் நடிகை ரம்யா கிருஷ்ணன் தான். அவர் இன்று எத்தனை பேருடன் நடித்தாலும் தனித்து தன்னை வெளிப்படுத்தி விடுவார். அவருக்கு தனித்த அடையாளம் கிடைத்திருக்கிறது. பாசிடிவ், நெகடிவ், டான்ஸ் என எல்லாவற்றிலும் பெயர் வாங்கி விடுவார். இந்த இடம் அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. போராடித்தான் பெற்றிருக்கிறார். அவர்தான் எனக்கு முன் மாதிரி. அவர் இடத்தை பிடிக்க முடியுமோ முடியாதோ அவர் நிழலையாவது பிடிப்பேன்.

என் சமூக வலைதளங்களில் தினமும் 200 பேராவது என் இன்பாக்ஸில் வந்து கருத்து சொல்கின்றனர். நண்பர்களும் அக்கம்பக்கம் உள்ளவர்களும் உறவினர்களும் பாராட்டுகின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget