டூ பீஸ் உடையில் மிரட்டும் எமி ஜாக்சன்

மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமான லண்டன் நடிகை எமி ஜாக்சன், அப்படத்திலும் லண்டன் பெண்ணாகவே நடித்தார். அதோடு மாடர்ன் கெட்டப்பில் தோன்றினாலும் ஒருகட்டத்தில் தமிழ்நாட்டு பெண்ணாகவே அவரது கேரக்டர் சித்தரிக்கப்பட்டிருந்ததால் குடும்ப குத்து விளக்காகவும் சில காட்சிகளில் நடித்தார் எமி. பின்னர் சில படங்களில் நடித்தவர் பிரமாண்ட
இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்தார். அதோடு ஒரு காட்சியில் டூ-பீஸ் உடையில் நடித்து இளைஞர்களை திக்குமுக்காட வைத்தார். அந்த காட்சியை டைரக்டர் ஷங்கர் அழகியலுடன் படமாக்கியிருந்ததால் இப்போதுவரை பேசப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தற்போது தான் இயக்கும் 2.ஓ படத்திற்கும் எமியை நாயகியாக புக் பண்ணியுள்ள ஷங்கர், அந்த படத்தில் அவருக்கு ரோபோ வேடம் கொடுத்திருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் ஒரு பேட்டியில், எனக்கு ரோபோ வேடமில்லை என்று மறுத்தார் எமிஜாக்சன். இந்த படத்தில் ரஜினியின் காதலியாக நடித்துள்ள அவர், ஒரு பாடல் காட்சியில் ஐ படத்தை போன்று டூ-பீஸ் உடையணிந்து நடித்துள்ளாராம். அந்த படத்தை விட இந்த படத்தில் அவரை பலகோணங்களில் இன்னும் கண்கவரும் வகையில் படமாக்கியுள்ளாராம் ஷஙகர். மேலும், 2.ஓ படத்தில் எமிஜாக்சனின் காஸ்டியூமிற்காகவே கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டிருக்கிறதாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget