கடந்த சில வருடங்களாக மீடியாக்களின் வெளிச்சத்தில் இருந்து வந்த லட்சுமி மேனன் 'வேதாளம்' படம் வெளிவந்த போது பரபரப்பாகப் பேசப்பட்டார். அதன் பின் அவரைப் பற்றிய செய்திகளும் குறைவாகவே வர ஆரம்பித்தன.
'மிருதன்' படமும் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. அந்தப் படத்திற்குப் பிறகு வேறு எந்தப் புதுப்படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமலே இருந்தார் லட்சமி. எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட 'சிப்பாய்' படம் ஏறக்குறைய நின்று போய்விட்டது என்றே சொல்லலாம்.
விஜய் சேதுபதியின் ஜோடியாக 'றெக்க' படத்தில் ஒப்பந்தம் ஆன பிறகு மீண்டும் லட்சுமி மேனன் பற்றிய செய்திகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. மதுரையில் ஆரம்பமான ஷுட்டிங் பரபரப்பாக நடந்து முதல் ஷெட்டியூல் முடிந்துவிட்டதாம். தான் இயக்கிய முதல் படமான 'வா டீல்' படம் வருமா, வராதா என்று தெரியாத நிலையில் இயக்குனர் ரத்தினசிவா 'றெக்க' படத்தை வீராப்புடன் இயக்கி வருகிறாராம்.
'றெக்க' படத்தில் தனக்குக் கிடைத்துள்ள கதாபாத்திரத்தில் மிகவும் விருப்பமுடன் நடித்து வரும் லட்சுமி மேனன் கிராமப்புறத்து கதாபாத்திரங்களுக்கு 'குட்பை' சொல்லிவிட்டாராம். அடுத்த இன்னிங்ஸ் தான் நினைப்பது போலவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள்.

கருத்துரையிடுக