ஒரு நாள் கூத்து

அனைத்து தரப்பினரும் ரசிக்கத்தக்கவகையில் திருடன் போலீஸ் என்ற ஜனரஞ்சகமான படத்தைத் தயாரித்த பட நிறுவனம் - கெனன்யா பிலிம்ஸ். இந்த நிறுவனம் தற்போது தினேஷ் நடிக்கும் ஒரு நாள் கூத்து, உள்குத்து, புரூஸ்லி என ஒரே
நேரத்தில் மூன்று படங்களை தயாரித்து வருகிறது. இவற்றில் ஒரு நாள் கூத்து படம் இந்த மாதம் 10 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

திரைப்படத்தை எடுப்பது பெரிய விஷயமில்லை, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிகப்பெரிய போராட்டம். அந்த வகையில் ஒரு நாள் கூத்து படத்தின் புரமோஷனை வித்தியாசமாக சிந்தித்து செயல்படுத்தியுள்ளது கெனன்யா பிலிம்ஸ். ஒரு நாள் கூத்து படத்துக்கு பல்வேறு வகையில் விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கும் கெனன்யா பிலிம்ஸ் பட நிறுவனம், புதுமையான முறையிலும் விளம்பர உத்தியை வடிவமைத்திருக்கின்றனர்.

அதாவது பிரபலமான பிரியாணி கடைகளில் டேபிளில் விரிக்கும் பேப்பரில் ஒரு நாள் கூத்து படத்தின் விளம்பரத்தை அச்சிட்டுள்ளனர். அந்த பிரியாணி கடைக்கு சாப்பிட வருபவர்கள் பிரியாணியை ஒரு கை பார்ப்பதற்கு முன் நிச்சயமாக ஒரு நாள் கூத்து போஸ்டரை பார்ப்பார்கள் அல்லவா?

கிரியேட்டிவ் ஐடியா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget