கபாலி ஆடியோ ரிலிஸ்

இந்திய சினிமாவின் முந்தைய சாதனைகளை முறியடித்து 2 கோடி ஹிட்ஸ்களை தாண்டியிருக்கிறது 'கபாலி' படத்தின் டீஸர். அது ஏற்படுத்திய எதிர்பார்ப்புடன், 'கபாலி' தரிசனத்திற்காக ரஜினி ரசிகர்கள் காத்துக்
கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்வகையில் ஜூலை 1 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கிறது - 'கபாலி'.

தற்போது கபாலி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' பாடல்களை ஜூன் முதல்வாரத்தில் வெளியிட இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் இப்போது படக்குழுவே அதிகாரப்பூர்வமாக கபாலி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். அதன்படி கபாலி படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற ஜூன் 12ம் தேதி பிரம்மாண்டமாய் நடைபெற இருக்கிறது.

இசை வெளியீடு எங்கு நடக்கிறது என்று அறிவிக்கவில்லை, பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழு கூறியுள்ளது. ஏற்கனவே நாம் சொன்னபடி கபாலி படம் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாய் நடைபெற இருக்கிறது. இதில் தமிழ் பிரபலங்கள் தவிர்த்து பிறமொழியின் டாப் நடிகர்களும் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget