சின்ன ரோல், பெரிய ரோல் என்கிற வித்தியாசமெல்லாம் பார்க்க தெரியாது மலையாள நடிகை அனுஸ்ரீக்கு.. ஆனால் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்வதாக இருக்கவேண்டும் அவ்வளவுதான்.. அந்த தைரியம் தான் 'இதிகாசா'
படத்தில் பெண்ணாக இருந்துகொண்டே ஆணாக அவரை நடிக்க வைத்தது.. 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் பஹத் பாசிலை உருகி உருகி காதலித்துவிட்டு, அப்பா பார்த்த கவர்மென்ட் மாப்பிளையை திருமணம் செய்துகொண்டு போகும் கேரக்டரில் எளிதாக பொருந்த வைத்தது. அந்த துணிச்சல் தான் இப்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஒப்பம்' படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரையும் வாங்கி தந்துள்ளது.
மலையாள நடிகைகளை பொறுத்தவரை இரண்டு ஆசைகள் அவர்களுக்கு நிச்சயம் உண்டு. ஒன்று மோகன்லாலுடன் நடிக்க வேண்டும்.. இன்னொன்று போலீஸ் வேடத்தில் நடிக்கவேண்டும். இது இரண்டுமே அனுஸ்ரீக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தது போல ஒரே படத்தில் கிடைத்துவிட்டது தான் ஆச்சர்யம். இந்தப்படத்தில் புதிதாக பொறுப்பேற்ற அசிஸ்டன்ட் கமிஷனர் வேடத்தில் நடித்துள்ளார் அனுஸ்ரீ.
இதில் ஒரு ஆச்சர்யம் என்ன தெரியுமா..? 'த்ரிஷயம்' படத்தில் தனது மகள் செய்த கொலையை திட்டமிட்டே மறைப்பார் மோகன்லால்.. அவரிடமிருந்து உண்மையை வரவழைக்க கடைசிவரை கடுமை காட்டுவார் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா சரத். ஆனால் இந்த 'ஒப்பம்' படத்திலோ கண்பார்வை தெரியாத மோகன்லால் ஒரு கொலைக்குற்றத்தில் தேவையில்லாமல் சிக்கிக்கொள்கிறார். அவர் நிரபராதி என நிரூபிக்க அவருக்கு உதவும் நல்ல மனம் கொண்ட போலீஸ் அதிகாரியாக அனுஸ்ரீ நடித்துள்ளார்.

கருத்துரையிடுக