சுஜா பாணியில் ரிஷா

சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்றுதான் என்ட்ரி ஆனார் சுஜா. ஆனால் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்தவருக்கு பின்னார் சரியான படங்கள் இல்லாமல் கேரக்டர் ரோல், அயிட்டம் பாடல்களில் ஆடத்தொடங்கினார். அதோடு தனது
பெயரையும சுஜா வாருணி என்று மாற்றினார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான பென்சில் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் இழுத்தார் சுஜா. அதையடுத்து வாடீல், சதுரம்-2, கிடாரி உள்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். அதோடு கதாநாயகி வேடம் வந்தாலும் நடிக்கத் தயார் என்று கூறி வருகிறார் சுஜா வாருணி.

இந்த நிலையில், கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் நடித்துள்ள அயிடடம் டான்ஸ் நடிகை ரிஷாவும் தான் கதாநாயகியாக நடிக்கப்போவதாக கூறி வருகிறார். தற்போது இரண்டு படங்கள் கைவசம் இருப்பதாக கூறும் ரிஷா, வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவும் தயாராகி விட்டாராம். சினிமாவில் ஹீரோயினியாக வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால் சூழ்நிலை என்னை குத்துப்பாட்டு நடிகையாக்கி விட்டது. என்றாலும், நதிகள் நனைவதில்லை, சோக்குசுந்தரம் உள்பட சில படங்களில் செகன்ட் ஹீரோயினாக நடித்து ஸ்கோர் பண்ணினேன். அதனால் இப்போது கதாநாயகி வேடத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறேன். மேலும், வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவும் ரெடியாகி விட்டேன். அதனால் வாய்ப்புகளை வரவேற்கிறேன் என்கிறார் ரிஷா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget