கிளாமர் நாயகியான மகிமா

'சாட்டை' படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமான மகிமா அதன் பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி, படங்களில் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்தார்.
கிராமத்து பெண்ணாக நடித்தால் பாவாடை தாவணிக்குத்தான் லாயக்கு என்று முடிவு செய்தது விடுவார்கள் என்று கருதிய மகிமா தற்போது கிளாமருக்கு மாறிவிட்டார். அறிவழகன் இயக்கத்தில் அவர் தற்போது நடித்து வரும் 'குற்றம் 23' படத்தில் கிளாமராக நடிக்கிறார். கேரக்டரின் பெயர் தென்றல். முதன் முறையாக நகரத்து பெண்ணாக நடிக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: முதன் முதலில் எனக்கு அறிவழகன் சார் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும், நான் சற்றே படப்படப்பானேன். அதன் பின்பு காலையில் எனக்கு நடைபெற்ற நடிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, அன்று மாலையே படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். இதுவரை கிராமிய கதாப்பாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த நான், இந்த திரைப்படத்தில் சிட்டி பெண்ணாக நடிக்கிகிறேன். தனது படங்களில் கதாநாயகிகளை மிக அழகாக சித்தரிக்கும் தனித்துவமான ஆற்றலை படைத்தவர் இயக்குனர் அறிவழகன். அந்த வகையில் இந்த படம் எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். என்னுடைய தென்றல் கதாப்பாத்திரத்தை நான் அதிக அளவில் காதலிப்பது மட்டுமில்லாமல் அந்த வேடத்தின் உயிராகவே நான் மாறியுள்ளேன்" என்கிறார் மகிமா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget