கண்ணாடி போடும் பெண்களுக்கு அழகு குறிப்புகள்

முகத்தின் அழகை மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள். ஆனால் கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள்  மூக்கு கண்ணாடியை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வில் மூக்கு
கண்ணாடி அன்றாட வாழ்க்கையில் அவசியமான  பொருளாக மாறிவிட்டது. இப்படி கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக் அப் போட வேண்டும் என்ற டிப்ஸ்கள்  கூறப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றி பயன் பெறுங்கள்.

நீங்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டியது உங்கள் புருவத்தில் இருந்து தான். உங்கள் புருவங்கள் சீர்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை கவனியுங்கள்.  உங்கள் கண்ணாடி புருவத்துடன் போட்டி போட வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் புருவங்கள் சரியான அளவில் வைத்திட தொழில் ரீதியான  வல்லுனரை சீரான முறையில் சந்தியுங்கள். இந்த வகையில் உங்கள் கண்களுக்கு மேக் அப் அங்கீகரிக்கப்படும்.

நல்ல ப்ரைமரை பயன்படுத்த வேண்டும். இதனால் கண்ணாடி அணிந்திருக்கும் உங்களின் கண்கள், கறை மற்றும் இழுவுதல் இல்லாமல் சரியாக  இருக்கும். கண் இமை ரோமங்களை சுருட்டி விடுங்கள். மஸ்காராவில் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. அடிப்படை கர்லர் ஒன்றே போதும்  உங்கள் பணியை திறம்பட செய்துமுடித்திட. இதனால் கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களின் கண்களுக்கான மேக்-அப் சிறப்பாக அமையும்.

முடிந்தால் ஐ-ஷேடோ போடுவதை தவிர்க்கவும். நாங்கள் அதை கண்டிப்பாக வேண்டாம் என்று தான் கூறுவோம். அதற்கு காரணம் அது உங்கள்  கண்ணாடியின் பின்புறத்தை நசநசவென ஆக்கிவிடும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தங்கள் கண்களுக்கு மேக் அப் போடும் போது இதனை தவிர்க்க  வேண்டும். நல்ல ஐ-லைனரை பயன்படுத்துங்கள். பூனை கண் வடிவம் அல்லது இறக்கை வடிவம் போன்ற பல விதமான வடிவங்களை முயற்சித்து  பாருங்கள்.

கண்ணாடி அணிந் திருக்கும் உங்களுக்கு, அதில் ஏதாவது ஒன்று ஒத்துப்போகும். உங்கள் கண்களுக்கு அழகு சேர்த்திடும். கண்ணாடி அணிந்திருக்கும்  நீங்கள் கண்களுக்கு மேக்-அப் செய்யும் போது, நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி வகை(மெல்லியது அல்லது தடியானது) என்பதை தெளிவாக கூற  வேண்டும். ஒருவேளை உங்கள் கண்கள் பெரியதாக தெரிந்தால், அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள். அதனை லேசாக போட்டு,  கண்களை சின்னதாகவும், மென்மையானதாகவும் காட்டுங்கள். 

உடனடி அழகு மற்றும் அடர்த்தியான தோற்றத்தை பெற, சிவப்பு, பிங்க் போன்ற அடர்த்தியான நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள்.  கண்ணாடி அணிந்தவர்கள் கண்களுக்கு மேக் அப் போடும் போது அதிக முயற்சி இல்லாமல் இது உங்கள் முக தோற்றத்தை உயர்த்தி காட்டும்.  ப்லஷரை மறந்து விடாதீர்கள். கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள் கண்களுக்கு மேக் அப் செய்யும் போது கன்னங்களில் பிங்க் நிற ப்லஷரை  பயன்படுத்தினால் உங்கள் மேக் அப் சோடை போகாது. உங்கள் தோற்றமும் பனித்துளியை போல விளங்கும். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget