பானாசோனிக் பி71 ஸ்மார்ட்போன்

தன்னுடைய 'P series' வரிசையில், P71 என்ற 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை, மத்திய நிலையில் விலையிட்டு, பானாசோனிக் நிறுவனம், அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் திரை, 5 அங்குல அளவில், 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுடன்,
எச்.டி. ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. கீறல் ஏற்படாத வகையில் இது தடுக்கப்பட்டுள்ளது. இதன் குவாட் கோர் ப்ராசசர் 1.25 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இரண்டு மாடல்களில் வந்திருக்கும் இந்த போன்களில், ஒன்றின் ராம் மெமரி 1 ஜி.பி. மற்றதில் 2 ஜி.பி. முதல் போன் அதிக பட்ச விலை ரூ. 7,490. அடுத்த மாடலின் விலை ரூ. 8,190. இவற்றின் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். ஆண்ட்ராய்ட் பதிப்பு 6 மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. பின்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் 8 எம்.பி. திறனுடன் உள்ளது. முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 143×71×8.15 மிமீ. எடை 138 கிராம். வளைவான முனைகள் இதற்கு அழகு சேர்க்கின்றன. இசைப் பிரியர்களூக்கு 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. இந்திய மொழிகள் பல இதில் பதிந்தே தரப்படுகின்றன. இதன் போன் முகவரி ஏட்டில், எத்தனை முகவரிகளை வேண்டுமானாலும் அமைக்கலாம். 
நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது. 

ஐவரி கோல்ட், கிரே பிளாக் ஆகிய வண்ணங்களில் இரண்டு மாடல்களில் இவை வெளிவந்துள்ளன. இதன் அறிமுக விழாவில் பேசிய பானசோனிக் இந்தியா நிறுவனப் பிரிவின் தலைவர் பங்கஜ் ரானா, “இந்தியர்கள் விரும்பும் வசதிகள் குறித்து தீவிரமான ஆய்வு மேற்கொண்டு, அவற்றின் அடிப்படையில் ஸ்மார்ட் போன்களை வடிவமத்துத் தருவதில் பானாசோனிக் நிறுவனம் முன்னணியில் உள்ளது'' என்று தெரிவித்தார். அந்த வகையில் பானாசோனிக் மாடல் போன்கள், எண்ணிலடங்காத வசதிகளைக் கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மொபைல் போன் விற்பனை மையங்கள் அனைத்திலும் இவை கிடைக்கின்றன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget