
தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, ஜியோனி நிறுவனம் S 6 S என்ற பெயரில், விற்பனைக்கு அண்மையில் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 18,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. ராம்
மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு, 128 ஜி.பி. வரை உயர்த்தலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் பதிப்பு 6.0. மார்ஷ்மலாய். இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 154.5 x 75.6 x 8.3 மிமீ. எடை 166 கிராம். இதன் திரை 5.5. அங்குல அளவில் IPS LCD கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாக அமைந்துள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதியும் கிடைக்கிறது. ஆடியோ வசதிக்கு, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் லவுட் ஸ்பீக்கர் இயங்குகிறது. எம்.பி. 3 மற்றும் எம்.பி. 4 பிளேயர்கள் இயங்குகின்றன. எச்.டி.எம்.எல். 5 பிரவுசர் தரப்பட்டுள்ளது.
நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, 4ஜி, வை பி, புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. பின்புறமாக இயங்கும் கேமரா ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு 13 எம்.பி. திறனுடன் செயல்படுகிறது. முன்புற செல்பி கேமரா 8 எம்.பி. திறனுடன் செயல்படுகிறது. இதன் சிப் செட் Mediatek MT6753 ப்ராசசர். இது 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் ப்ராசசர் ஆகும். இதனுடன் Mali-T720MP3 ஜி.பி.யு. இணைந்து செயல்படுகிறது. Fingerprint, accelerometer, proximity, compass ஆகிய சென்சார்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி லித்தியம் போடியம் 3150 mAh திறனுடன் வெளியே எடுக்க முடியாத வகையில்
கருத்துரையிடுக