தற்போது மணல் கயிறு-2, சவரக்கத்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார் பூர்ணா. இதற்கு முன்பு பாசிட்டீவ், நெகடீவ் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தபோதும் அந்த வேடங்கள்
அவர் மீது பெரிதாக வெளிச்சம் போடவில்லை. இந்த நிலையில், தற்போது நடித்துள்ள இந்த இரண்டு படங்களையும் பெரிதாக எதிர்பார்க்கிறார் பூர்ணா. அதிலும், டைரக்டர் ராமிற்கு ஜோயாக நடித்துள்ள சவரக்கத்தி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது பெரும் பாக்கியம் என்று கூறுகிறார் பூர்ணா.
அதோடு, இந்த படத்தில் நான் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக சிறப்பாக நடித்திருப்பதாக அப்படத்தை தயாரித்து வில்லனாக நடித்துள்ள மிஷ்கின், மற்றும் நாயகனாக நடித்துள்ள டைரக்டர் ராம் ஆகியோர் சொல்கிறார்கள். ஆனால், என்னைக்கேட்டால் ராம் சார்தான் சிறப்பாக நடித்துள்ளார். அவரது நடிப்பில் அத்தனை உயிரோட்டம் இருந்தது. சலூன் கடை நடத்துபவராக பக்காவாக மாறி விட்டார். அவர் அப்படி மாறியதைப்பார்த்த பிறகுதான் நானும் என்னை அவருக்கேற்ப மாற்ற முயற்சி செய்தேன். ஆனால் அப்படி சிறப்பாக சவரக்கத்தியில் நடித்துள்ள டைரக்டர் ராம், நான் நன்றாக நடித்திருப்பதாக கூறி வருகிறார். அந்த வார்த்தையை அவர் வாயால் சொல்லக்கேட்டு பெருமையாக உள்ளது என்கிறார் பூர்ணா.

கருத்துரையிடுக