ஜெயலலிதாவுக்கு முன் உயிரிழந்த 16 முதலமைச்சர்கள்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த திங்கள் கிழமை இரவு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதனால் பதவியில் இருக்கும் போதே உயிரிழந்த முதலமைச்சர்கள் பட்டியலில் ஜெயலலிதாவும் சேர்ந்துள்ளார். தமிழகத்தில் மட்டும் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்-ஐ தொடர்ந்து 3-வது நபராக ஜெயலலிதா பதவியில் இருக்கும் போதே உயிரிழந்துள்ளார்.

இந்த ஆண்டில் இதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக இருந்த முப்தி முகமது சயது உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார்.

பதவியில் இருக்கும் போதே உயிரிழந்த முதல்வர்கள் விவரம்:-

1. கோபிநாத் போர்தோலோய், அசாம் (ஆகஸ்ட் 6, 1950)

2. ரவிசங்கர் சுக்லா, மத்திய பிரதேசம் (டிசம்பர் 31, 1956)

3. ஸ்ரீ கிருஷ்ணா சிங், பீகார் ( ஜனவரி 31, 1961)

4. பிதன் சந்திர ராய், மேற்கு வங்காளம் (ஜூலை 1, 1961)

5. மரோட்ராய் கன்னம்வர், மகாராஷ்டிரா (நவம்பர் 24, 1963)

6. பல்வந்த்ராய் மேத்தா, குஜராத் (செப்டம்பர் 19, 1965)

7. சி.என்.அண்ணாதுரை (பிப். 3, 1969)

8. தயானந்த் பந்தோட்கர், கோவா (ஆகஸ்ட் 12, 1973)

9. பர்கதுல்லா கான், ராஜஸ்தான் (அக்டோபர் 11, 1973)

10. ஷேக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் (செப்டம்பர் 8, 1982)

11. எம்.ஜி.ஆர் (டிசம்பர் 24, 1987)

12. சிமன்பாய் படேல், குஜராத் (பிப்ரவரி 17, 1994)

13. பீண்ட் சிங், பஞ்சாப் (ஆகஸ்ட் 31, 1995)

14. ஒய்.எஸ்.ஆர் ரெட்டி, ஆந்திர பிரதேசம் (செப்டம்பர் 2, 2009)

15. டார்ஜி காண்டு, அருணாச்சல பிரதேசம் (ஏப்ரல் 30, 2011)

16. முப்தி முகமது சயது, ஜம்மு-காஷ்மீர் (ஜனவரி 7, 2016)
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget