வேர்ட் டாகுமெண்ட்டில் வாட்டர்மார்க் எப்படி

“வாட்டர்மார்க்” என்னும் பின் குறியிடல் என்பது நாம் அமைக்கும் டாகுமெண்ட்களின் பக்கங்களில், டெக்ஸ்ட்டுக்குப் பின்புறமாக, டெக்ஸ்ட்டின்
தோற்றத்தைப் பாதிக்காத வகையில் அமைக்கப்படும் டெக்ஸ்ட் அல்லது படம் ஆகும். பெரும்பாலும், ரகசிய ஆவணங்களுக்கு “confidential”, முழுமை அடையாத ஆவணத்திற்கு “Draft” எனவும் அமைப்பதுண்டு, சில நிறுவனங்கள், குறிப்பாகக் கல்வி நிறுவனங்கள், தங்கள் இலச்சினையைப் படமாக இணைப்பதுண்டு. டாகுமெண்ட் ஒன்றில், இந்த குறியீட்டினை அமைப்பது எளிதுதான். இருப்பினும் நாமெல்லாரும் பொதுவாக அறிந்ததற்கும் மேலாக, சில கூடுதல் வசதிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம். கீழே தந்துள்ள செயல் முறைகளை, வேர்ட் செயலியில் ரிப்பன் மெனு கொண்ட (வேர்ட் 2007) செயலி மற்றும் அதன் பின்னர் வந்தவற்றில் பயன்படுத்தலாம். வேர்ட் 2003லும் வாட்டர்மார்க் குறியீடு அமைக்கும் வசதி உள்ளது. ஆனால், அதற்கான செயல்முறைகள் இங்கு தரப்படவில்லை.

முதலில் வாட்டர்மார்க் அமைப்பது குறித்த சில அடிப்படை குறிப்புகளைக் காணலாம். வேர்ட் 2007ல், Page Layout என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், Page Background பிரிவில், Watermark என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு பல வாட்டர்மார்க் படங்கள் கொண்ட விண்டோ கிடைக்கும். இதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இது, ஏற்கனவே அமைக்கப்பட்ட ஒன்றாக அமையும். இதனை, நெட்டுவாக்கிலோ, படுக்கை வாக்கிலோ, சாய்வாகவோ அமைக்கலாம்.

இதில் நீங்கள் விரும்பும் வகையில் அமைக்க Custom Watermark என்பதில் கிளிக் செய்து, அதில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி அமைக்கலாம். இந்த வசதிகளைப் பயன்படுத்தி, படம் அல்லது டெக்ஸ்ட் அமைக்கலாம். படம் அமைப்பதாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படத்தை, அதன் போல்டரைத் திறந்து இணைக்கலாம். இல்லாமல், டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றால், அதற்கான எழுத்துரு, அளவு, வண்ணம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

அமைக்கப்பட்ட வாட்டர் மார்க் குறியீட்டினை திசை திருப்பி அமைக்க, ஹெடர் புட்டர் தேர்ந்தெடுக்க வேண்டும். வாட்டர் மார்க் படம் பார்மட் செய்திட வசதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். அதனை நம் வசதிப்படியான கோணத்தில் அமைக்கலாம்.

டாகுமெண்ட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நெட்டுவரிசை பத்திகள் அமைக்கப்பட்டிருந்தால், ஒரே ஒரு வாட்டர்மார்க் அமைத்தால், நெட்டு வரிசை பத்திகளைப் பற்றி கவலைப்படாமல் அது அமையும். ஆனால், ஒவ்வொரு நெட்டு வரிசை பத்தியிலும் ஒரு வாட்டர்மார்க் அமைக்க விரும்பினால், அந்த வகையில் அந்த பத்தியின் நடுவில் வாட்டர்மார்க் அமையும். பின்னர், ஒவ்வொரு பத்தியிலும், ஒரு வகையில் அதன் வாட்டர்மார்க்கினை அமைக்கலாம்.

இரு வேறு விதமாக பத்திகளில் அமைக்கக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.

முதலில் மேலே குறிப்பிட்ட வகையில், வாட்டர்மார்க் அமைத்த பின்னர், இரு நெட்டு பத்திகள் இருந்தும், வாட்டர்மார்க் நடுவில் அமையும். நீங்கள் இரு நெட்டு வரிசையிலும் தனித்தனியே அதே வாட்டர்மார்க் அமைக்கப்பட வேண்டும் என விரும்பலாம். முதலில் கூறியபடி வாட்டர்மார்க் அமைந்த பின்னர், ஹெடர் பகுதியில் கிளிக் செய்து அப்பகுதியைத் திறக்கவும். இப்போது வாட்டர்மார்க் சுற்றிலும் பார்மட் செய்வதற்கான குறியீடுகளைக் காணலாம். இதனை Ctrl+C அழுத்தி காப்பி செய்திடவும். பின், Ctrl+V அழுத்தவும். இன்னொரு வாட்டர்மார்க் ஒட்டப்படும். இப்போது புதியதை இழுத்து இரண்டாவது நெட்டு பத்தியின் மையமாக அமைக்கவும்.

இன்னும் பலவகையில் நம் விருப்பப்படி இந்த வாட்டர்மார்க்கினை அமைக்கலாம். டெக்ஸ்ட் ஒன்றினை வாட்டர்மார்க்காக அமைத்தால், இன்னும் பல வகையில் அதனை பார்மட் செய்திடலாம். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget