நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
ராணுவத்திற்கு அதிக செலவு :
உலக நாடுகள் தங்களின் நாட்டின் பாதுகாப்பிற்காக செலவிடும் தொகை குறித்த ஆண்டு அறிக்கையை ஐ.ஹச்.எஸ்., ஜேன் தற்போது வெளியிட்டுள்ளது. இதில், தெற்கு சீன கடல் விவகாரத்தில் ஆசிய நாடுகள் பாதுகாப்பிற்காக செலவிடப்படும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2010 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீனாவின் ஆண்டு பட்ஜெட்டில் 2020 ம் ஆண்டு வரை ராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
4வது இடத்தில் இந்தியா : ராணுவத்திற்காக அதிகம் செலவிடும் 105 நாடுகள் அடங்கிய பட்டியலில், ரஷ்யா, சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 4 வது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய பவுண்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் 2018 ம் ஆண்டில் பாதுகாப்பிற்காக இந்தியா செலவிடும் தொகையும் அதிகரிக்கும். ராணுவத்திற்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. 2016ம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்பிற்காக அமெரிக்கா 622 பில்லியன் டாலர்களை ஒதுக்கி உள்ளது. ஐரோப்பா 219 பில்லியன் டாலர்களை ஒதுக்கி உள்ளது.

கருத்துரையிடுக