எக்ஸெல் ஒர்க் ஷீட்டுகளை மறைக்க டிப்ஸ்

ஒர்க் ஷீட்டுகளை மறைக்க : சில வேளைகளில், நாம் உருவாக்கும் குறிப்பிட்ட ஒர்க் ஷீட்டுகளை, மறைத்து வைக்க வேண்டிய நிலைகளை நாம் சந்திப்போம். குறிப்பிட்ட ஒர்க் ஷீட்டில் தரப்படும்
தகவல்கள் மற்றவர்கள் அறியக் கூடாதவையாக இருக்கலாம். அல்லது, அனைத்தையும் அறிந்து கொள்ளத் துடிப்போரின் கண்களுக்குத் தேவையின்றி காட்டப்படாமல் இருக்க வேண்டும் என நாம் எண்ணலாம்.
ஒர்க்ஷீட் ஒன்றை மறைத்து செயல்படுத்தக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

1. மறைக்க வேண்டிய ஒர்க் ஷீட்டினை முதலில் தேர்ந்தெடுக்கவும்.

2. ரிப்பனில் Home டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. Cells குரூப்பில் Format டூல் மீது கிளிக்கிடவும். எக்ஸெல் இப்போது மெனு ஒன்றைக் காட்டடும்.

4. இங்கு Hide & Unhide என்பதை முதலில் தேர்ந்தெடுத்துப் பின்னர், Hide Sheet என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒர்க் ஷீட் உடனே மறைக்கப்பட்டுவிடும். இதனை எப்படி மீண்டும் கொண்டு வருவது என்பது சந்தேகமாக வினா எழுப்புகிறதா? இதோ அதற்கான வழிகள்.

1. ரிப்பனில் Home டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

2. Cells குரூப்பில் Format டூல் மீது கிளிக்கிடவும். எக்ஸெல் இப்போது மெனு ஒன்றைக் காட்டடும்.

3. இங்கு Hide & Unhide என்பதை முதலில் தேர்ந்தெடுத்துப் பின்னர், Unhide Sheet என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது எக்ஸெல், Unhide டயலாக் பாக்ஸ் ஒன்றைக் காட்டும். இதில் நீங்கள் ஏற்கனவே மறைத்து வைத்து, தற்போது தேவைப்படும் ஒர்க் ஷீட்டின் பைல் பெயர் மீது கிளிக் செய்திட்டால், அந்த ஒர்க் ஷீட் காட்டப்படும்.

4. மீண்டும் ஒர்க் ஷீட் திறக்க விரும்பும் செயல்பாட்டினை, Unhide டயலாக் பாக்ஸ் பெற்று மேற்கொள்ளலாம். இதற்கு, ரிப்பனில், வியூ டேப்பினைக் கிளிக் செய்திடவும். இதில் உள்ள விண்டோ குரூப்பில் Unhide என்பதனைக் கிளிக் செய்து இந்த டயலாக் பாக்ஸினைப் பெற்று, பின் நீங்கள் விரும்பும் மறைக்கப்பட்ட ஒர்க் ஷீட்டினைப் பெறலாம்.

அப்போதைய நேரம் பதிய :  சிலர் எக்ஸெல் புரோகிராமில் பணி செய்கையில், தாங்கள் ஈடுபடும் பல்வேறு வேலைகளில், தாங்கள் செலவழிக்கும் கால அளவை அறிய திட்டமிடுவார்கள். அதற்கென, வேலை தொடங்கும் போது அல்லது முடிக்கும் போது, அல்லது இடைவெளியின் போது, அப்போதைய நேரத்தைப் பதிய விரும்புவார்கள். இவர்கள், நேரத்தைப் பார்த்து, அதனை டைப் செய்து எண்டர் தட்ட வேண்டியதில்லை. செல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, Ctrl+: (: -கோலன்)என்ற கீகளை அழுத்தினால் போதும். கோலன் அமைக்க ஷிப்ட் கீ அழுத்தப்பட வேண்டும் என்பதால், இதனை குடடிஞூt+இtணூடூ+: எனவும் கூறலாம். இந்த கீகளை அழுத்திவிட்டால், எக்ஸெல், நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில், சிஸ்டத்தின் அப்போதைய நேரத்தினை அமைக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உடனே எண்டர் அழுத்தி, அதனை ஏற்றுக் கொள்வதுதான்.

டேட்டாவின் கீழாக கோடு அமைக்க :  எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான U ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + U அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அடிக்கோடு அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே போல பலவகைக் கோடுகள் அமைக்க, Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்திப் பாருங்கள். பலவித அடிக்கோடுகளை Underline பகுதியில் காணலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget