முப்பரிமாண கேமரா வசதியுடன் புத்தம் புது ஐபோன் 8

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8, அடுத்த ஆண்டில் வர உள்ளது. இது ஐபோன் வெளியாகி பத்தாம் ஆண்டில் வெளியாக இருப்பதால், இதில் பல
புதுமைகளை, ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Barclays Research என்னும் ஆய்வு நிறுவனம் இது குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, சில தகவல்களைத் தந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்குத் தேவையான சில பாகங்களைத் தரும் ஆசிய நிறுவனங்களுக்குச் சென்று இந்த தகவல்களை உறுதி செய்து வெளியிட்டுள்ளது. ஐபோன் 8 மாடல் 5 மற்றும் 5.8 அங்குல அளவிலான திரைகளுடன் வெளியாகும்.

இது வளைவாகவும், சுற்றுப் புற விளிம்புகள் (Bezels) இல்லாமலும் இருக்கும். திரை அளவு வழக்கம் போல 4.7 மற்றும் 5.5. அங்குல அளவில் இருந்தாலும், இந்த விளிம்பு இல்லாத திரையாகவே அவை இருக்கும் என்று உறுதியாகக் கூறியுள்ளது. நீள வாக்கில் திரை அளவு கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதைப் போலவே, அகல வாக்கிலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம் என்றும் இதன் அறிக்கை கூறுகிறது.

ஆப்பிள் நிறுவனம், எல்.ஜி. நிறுவனத்துடன் இணைந்து 'டூயல் கேமரா' ஒன்றை வடிவமைத்து வருகிறது. இதன் மூலம் முப்பரிமாணப் படங்களை எடுக்க முடியும். இது வர இருக்கும் ஐபோன் 8ல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்.ஜி. நிறுவனத்தின் Innotek's smartphone camera தொழில் நுட்பத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் நுட்பம் புகுத்தப்பட்டு, டூயல் லென்ஸ் கேமரா வடிவமைக்கப்படும். எல்.ஜி. நிறுவனம் ஏற்கனவே, முப்பரிமாண படங்கள் தரக்கூடிய கேமராவினையும் அது சார்ந்த தொழில் நுட்பத்தினையும் கொண்டுள்ளது.

இப்போது இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8ல் புதிய முப்பரிமாணக் கேமரா கிடைக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. ஏற்கனவே, ஐபோன் 7 ப்ளஸ் ஸ்மார்ட் போனில் இயங்கும் ட்வின் ஸ்நாப்பர் என்னும் கேமராவினை, எல்.ஜி. இன்னோடெக் நிறுவனம் வழங்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. எல்.ஜி. நிறுவனம் முப்பரிமாண கேமரா வடிவமைப்பதில் நல்ல அனுபவம் பெற்ற நிறுவனமாகும். இதன் முப்பரிமாண தொழில் நுட்பம், 2011ல் வெளிவந்த LG Optimus 3D என்னும் ஸ்மார்ட் போனில் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், எல்.ஜி. இன்னோடெக் நிறுவனத்துடனான கூட்டமைப்பில், ஆப்பிள் என்ன கொண்டு வரத் திட்டமிடுகிறது என்பது மர்மமாகவே உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget