கனவுகளுக்கு பலன்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம்… கனவுகள் பற்றி மருத்துவம் என்ன சொல்கிறது என்பதைத்
தெரிந்துகொள்வதற்காக அலன் ஹாப்சன் என்ற ஆய்வாளர் பல முயற்சிகள் செய்திருக்கிறார். அவர் கண்டுபிடித்த சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே!
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருக்கும் கனவுகள் பொதுவானவை. பார்வை குறைபாடு கொண்டவர்கள் எந்தக் காட்சியையும் பார்ப்பதில்லை என்றாலும், அவர்களுக்கும் கனவுகள் வருவதுண்டு.
கனவுகளின் ஆயுள் 5 முதல் 20 நிமிடங்கள் வரைதான். இதுபோல ஒருவர் கனவு காண்பதில் தன் வாழ்நாளில் சராசரியாக ஆறு ஆண்டுகளைச் செலவழிக்கிறார்.
95 சதவிகித கனவுகள் தூங்கி எழுந்ததும் மறந்துவிடுகின்றன. எஞ்சியிருக்கும் 5 சதவிகித கனவுகளே நினைவில் இருக்கிறது. செய்திகளை நினைவுத்திறனாக மாற்றும் மூளையின் ஃப்ராண்டல் லோப் என்ற பகுதி ஆழ்ந்து உறங்கும்போது செயல்படுவதில்லை என்பதே காரணம்.
கனவுகளில் 80 சதவிகிதம் ஷங்கர் பட பாடல்கள் போல கலர்ஃபுல்லானவை. சிலருக்கு மட்டுமே பாகவதர் காலம்போல கருப்பு வெள்ளையில் வருகிறதாம்!
வில்லியம் டாம் ஹாஃப் என்ற ஆய்வாளர் ஆண்களின் கனவுகளுக்கும் பெண்களின் கனவுகளுக்கும் நிறைய வித்தி யாசங்கள் உண்டு என்கிறார். பெண்கள் ஆண்களை விட சற்று கூடுதலான நிமிடங்கள் கனவு காண்கிறார்களாம்.
தூக்கத்தில் நாய்க்குட்டிகள் வாலாட்டினாலோ, கால்களை அசைத்தாலோ அவை கனவு காண்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சில கனவுகள் தெள்ளத்தெளிவாக நினைவிருந்தால் நீங்கள் ஆழ்ந்து தூங்கவில்லை என்றே அர்த்தமாம். இதன்மூலம் சுயநினைவோடு ஒரு கனவை வழிநடத்துகிறீர்கள் அல்லது கட்டுப்படுத்துகிறீர்கள் என்கிறார்கள்.
ஏறக்குறைய 40 ஆண்டுகளாக கல்லூரி மாணவர்களின் கனவை கால்வின் எஸ் ஹால் என்பவர் ஆராய்ந்திருக்கிறார். இதில் பாசிட்டிவான கனவுகளை விட எதிர்மறையான எண்ணங்கள்தான் பல மாணவர்களின் கனவுகளாக இருந்திருக்கிறது.
‘பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கு காட்சிகளாக கனவுகள் விரியாவிட்டாலும் சப்தங்கள், தொடு உணர்வு, சுவை, கேட்பது, வாசனை போன்ற உணர்வுகளின் வடிவத்தில் கனவுகளை உணர்கிறார்கள்

கருத்துரையிடுக