மாதவிலக்கு கோளாறை குணமாக்க வேண்டுமா

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உணவுக்காக பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு நலம் தரும்
நாட்டு மருத்துவத்தில் எளிதான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அவரையை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறை சரிசெய்வது, வெள்ளைபோக்கு, வயிற்றுபோக்கு பிரச்னைகளை தீர்ப்பது, மொச்சையின் பயன்பாடு குறித்து காணலாம்.

பல்வேறு நன்மைகளை கொண்ட அவரை சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. அவரை கொடி இனத்தை சேர்ந்தது. மொச்சை குளிர்காலத்தில் எளிதாக கிடைக்கும். ஊடுபயிராக விளங்கும் மொச்சை பல்வேறு நன்மைகளை கொண்டது. மொச்சையை அடிக்கடி பயிரிடுவதால் நிலத்துக்கு நல்ல சத்துக்கள் கிடைக்கும்.
அவரை பூக்களை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறை சரிசெய்யும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அவரை பூ, பனங்கற்கண்டு.

அவரை கொடியின் பூக்கள் சுமார் 15 எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். இதில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை அன்றாடம் குடித்துவர முறையற்ற மாதவிலக்கு சரியாகிறது. மாதவிலக்கு தூண்டப்படுகிறது. இளம் தாய்மார்களுக்கு தாய்பால் சுரப்பதற்கு சத்தூட்டமான உணவாகிறது. பால்வினை நோய்களை சரிசெய்ய கூடியது. அவரை பூக்கள் அற்புதமான மருந்தாகிறது.

அவரை இலையை பயன்படுத்தி சீத கழிச்சல், வெள்ளைப்போக்கு பிரச்னைகளுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அவரை இலை, பனங்கற்கண்டு. அவரை இலையை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து பாகுபதத்தில் காய்ச்சவும். இதை சாப்பிட்டுவர கழிச்சல், சீத கழிச்சல், வயிற்றுபோக்கு, வெள்ளைபோக்கு போன்ற பிரச்னைகள் தீரும்.

மருத்துவ குணங்களை கொண்ட அவரை இலை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இலையை மேல்பூச்சாக போடும் போது பாம்புக்கடி விலகி போகும். விஷம் முறிவாக விளங்கும் இது தோல்நோய்க்கு மருந்தாகிறது. அவரை இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அவரை இலை, சுண்ணாம்பு, விளக்கெண்ணெய். அவரை இலை பசையுடன் சிறிது சுண்ணாம்பு சேர்க்கவும். இதில், 3 சொட்டு விளக்கெண்ணெய் விட்டு நன்றாக கலந்து மேல்பூச்சாக போடும்போது புண்கள் ஆறும். விஷக்கடி, அரிப்பு, தடிப்புக்கு மருந்தாகிறது.

அவரை, மொச்சை ஆகியவை ஒரே மருத்துவ குணங்களை கொண்டவை. மொச்சை இலைகளை கீரையாக செய்து சாப்பிடலாம். மொச்சை கொட்டை புரதச்சத்து உடையது. இதை கழுவி சுத்தப்படுத்தி வேகவைத்து  சாப்பிடுவதால் சத்தூட்டமான உணவாகிறது. அவரை, மொச்சையை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலம் பெறும்.
நாவறட்சிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு பருப்புக்கீரை மருந்தாக அமைகிறது. உணவாக பயன்படுத்தும் பருப்பு கீரையை சாறாக்கி நாவில் தடைவினால் எச்சில் ஊறும். நாவறட்சி இல்லாமல் போகும். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget