கோலிவுட் ரேசில் சாயாசிங்

'திருடா திருடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை சாயாசிங். இந்த படத்தை சுப்பிரமணியம் சிவா இயக்கினார் . 'திருடா திருடி'
படத்தில் சாயாசிங் ஜோடியாக நடிகர் தனுஷ் நடித்து இருந்தார். அந்தப்படம் இருவருக்கு நல்ல வரவேற்பை தமிழ் சினிமாவில் கொடுத்தது. இப்படத்தில் இடம் பெற்ற 'மன்மதராசா...' பாடலில் இருவரின் நடனமும் எல்லோராலும் தற்போது வரை பேசப்படுகிறது. அதன்பின் சில படங்களில் நடித்த சாயாசிங் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷ், இயக்கி, நடிக்கும் ‛பவர் பாண்டி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

பவர் பாண்டி படத்தில் நடிக்கும் அனுபவம் பற்றியும், தனுஷின் இயக்கும் திறமை பற்றியும் புகழ்ந்துள்ளார் சாயாசிங். அதன்விபரம் வருமாறு... 'தனுஷ் இயக்கும் முதல் படமான பவர் பாண்டி படத்தில் என்னை பரிந்துரை செய்தவர் ‛திருடா திருடி' படத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தான். தனுஷ், நடிகராக இருந்து இயக்குநரானவர் என்பதால் நடிகர்-நடிகைகளிடமிருந்து எப்படி நடிப்பை வாங்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். தனுஷ் சிறந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்தது, ஆனால் ஒரு இயக்குநராகவும் இவரின் திறமை மிகவும் சிறப்பாக இருக்கிறது. முதல்பட இயக்குநர் போல் அவர் இல்லை பல படங்களை இயக்கிய அனுபவம் போன்று அவரிடம் தெரிகிறது, ஒரு குழந்தை போல் உற்சாகமாக இருக்கிறார் தனுஷ்” என்று ஏகத்துக்கும் புகழ்ந்துள்ளார் சாயாசிங்.

'பவர்பாண்டி' படத்தில் தனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . 'பவர் பாண்டி' படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget