அப்பா கமலின் இயக்கத்தில் தனக்கு நடிப்பது பயமாக இருப்பதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் வாரிசான ஸ்ருதிஹாசன்,
தற்போது முதன்முறையாக கமலின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. இதையடுத்து கமல், வீட்டு மாடிப்படியிலிருந்து கீழே விழுந்ததால் படப்பிடிப்பு தடைபட்டது. சிலகாலம் ஓய்வு எடுத்த கமல், மீண்டும் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு பணிகளில் இறங்கியுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ருதி, தந்தையின் இயக்கத்தில் நடிக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்..."'சபாஷ் நாயுடு' படத்தை அப்பா கமல், மிக சிறப்பாக தயாரித்தும், இயக்கியும் வருகிறார். அவர் விரும்பும் படியான காட்சி அமையும் வரை படப்பிடிப்பை முடிக்க மட்டார் . படத்தில் ஒவ்வொரு காட்சிகள் மீதும் அவர் கவனமாக இருப்பார். அவருக்கு பிடித்து இருந்தால் மட்டுதான் அடுத்த காட்சிக்கு போவர். இந்தப் படத்தில் நடிப்பது மிக அற்புதமான அனுபவம். ஆனால், இதில் நடிக்கும்போது தனிப்பட்ட முறையில் எனக்கு பயம் அதிகமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக