தோல் நோய்களை குணமாக்க வேண்டுமா

எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை
பார்த்து வருகிறோம். அந்தவகையில், மருதாணி, அருகம்புல், பூவரசு ஆகியவற்றை கொண்டு தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கான மருத்துவத்தை பார்க்கலாம்.

பூவரசு மஞ்சள் நிற பூக்களை உடையது. பம்பரம் போன்ற உருவம் உடைய காய்களை கொண்டது. ரத்தத்தை  சுத்தப்படுத்த கூடியது. மருதாணி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரவல்லது. தோலுக்கு அழகை தருகிறது. நகப்பூச்சாக பயன்படுகிறது. அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் மூலிகையாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்புக்கான மருந்தாக விளங்குகிறது.

மருதாணியை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். மருதாணியின் துளிர் இலைகள் ஒருகைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதில், 2 பல் பூண்டு, 6 மிளகு ஆகியவற்றை லேசாக தட்டிபோடவும். கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி 50 மில்லி அளவுக்கு குடித்துவர ரத்தம் தூய்மை பெறும். தோலில் ஏற்படும் அரிப்பு, தொற்று, சிறுகொப்புளங்கள், படர்தாமரை போன்றவை விலகிப்போகும்.

மருதாணி நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை  போக்க கூடியது. நோயை தணிக்கும் தன்மை கொண்டது. நகங்களுக்கு மேல்பற்றாக போடுவதால் நகச்சொத்தை நீங்கும். நகத்துக்கு நல்ல வண்ணம், பாதுகாப்பு, அழகை கொடுக்க கூடியதாகிறது. உடல் குளிர்ச்சி பெறும். தோல்நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. வெள்ளைப்போக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது.

அருகம்புல்லை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பங்கு அருகம்புல் பொடி, கால் பங்கு மஞ்சள் பொடி சேர்த்து கலந்து பசையாக்கி உடலில் அரிப்பு இருக்கும் இடத்தில் தேய்து குளித்தால் தோலில் ஏற்படும் அரிப்பு குணமாகும். தோல் மென்மை பெறும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அருகம்புல் நோய் நீக்கியாகிறது. ஒவ்வாமையை போக்குகின்ற உன்னதமான மருந்தாக விளங்குகிறது. காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்துவர ரத்தம் சுத்தமாகும். சர்க்கரை நோயை தணிக்க கூடியதாக உள்ளது. இதில் உள்ள புரதச்சத்து உடலுக்கு பலம் தரும்.

பூவரசம் இலையை பயன்படுத்தில் தோல் அரிப்பு, தொற்றுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் பூவரசம் இலை பசையை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை ஆறவைத்து மேல்பூச்சாக பயன்படுத்தும்போது தோலில் ஏற்படும் அரிப்பு, தேமல், படை, சொரி, சிரங்கு, வெண்புள்ளிகள் சரியாகும்.

பூவரசம் மரத்தின் பழுப்பு இலைகளை எடுத்து தீயில் இட்டு சாம்பலாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தோலில் அரிப்பு இருக்கும் இடத்தில் பூசினால் பிரச்னை சரியாகும். பூவரசு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்க கூடியது. ஒவ்வாமையை போக்கவல்லது. பூவரசம் பட்டையை தேனீராக்கி குடிப்பதால் ரத்தம் சுத்தமாகும். வெண்குஷ்டம் விலகிப்போகும்.
முகத்தில் உண்டாகும் எண்ணெய் பசையை போக்கி முகப்பரு வராமல் தடுப்பதற்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம்.

வியர்வை நாளங்கள் அடைபடுவதால் முகப்பரு ஏற்படுகிறது. எண்ணெய் சுரப்பியில் ஏற்படும் வீக்கம் முகப்பருக்களுக்கு காரணமாகிறது. திருநீற்று பச்சை இலையை நசுக்கி, இதனுடன் சந்தன விழுது சேர்த்து கலந்து முகத்தில் சிறிது நேரம் பூசிவைத்து கழுவினால் முகப்பரு மறையும். மீண்டும் முகப்பரு வராது. முகம் பொலிவு பெறும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget