அநேகமாக வீட்டில் நடக்கும் கஜினிமுகமது சண்டைகளே ரிமோட்டுக்காகத்தானே! தட்டி தட்டி க்யூட் அறிவியல் மெக்கானிசங்களை நம்
தலைமுறை பெற்றதே ரிமோட்டினால்தானே! அதில் ஆல் நியூ புரட்சியாக பென் டிரைவ் போல வந்துள்ள ரிமோட்டினால் டி.வி மீடியா பிளேயர், லைட், ஏசி என மனைவியைத் தவிர அனைத்தையும் கன்ட்ரோல் செய்யலாம் என்பது நெஞ்சில் டிஜிட்டல் இன்பம் வார்க்கும்தானே!
2014 ஆம் ஆண்டு 4 பேர் ஒன்றிணைந்து தொடங்கிய செவன்ஹக்ஸ் நிறுவனத்தின் படைப்பு இது. எதை கன்ட்ரோலாக ஆட்டி வைக்க நினைக்கிறீர்களோ அதனை நோக்கி செவன்ஹக்ஸ் ஸ்மார்ட் ரிமோட்டை நீட்டினாலே போதும். மிச்சமெல்லாம் அதன் டச் ஸ்கிரீன் பார்த்தால் உங்களுக்கே புரியும். டிவி, அதற்கு அருகிலுள்ள ஸ்பீக்கர் என இரண்டில் எதை இயக்க வேண்டுமோ அதனை மட்டும் செலக்ட் செய்து இசை மழையில் கெட்ட ஆட்டம் போடலாம். இதன் மூலம் மொத்தம் 25 ஆயிரம் பொருட்களை இயக்கலாம்.
இந்த ஸ்மார்ட் ரிமோட் வைஃபை, ப்ளூடூத், இன்ஃப்ரா ரெட் மூலம் பொருட்களை கட்டுப்படுத்துகிறது. மினி உருவத்தில் இருக்கிறதே, தொலைந்துவிட்டால்...? என இழுக்கும் உஷார் ஆட்களை திருப்தி செய்ய ரிமோட்டின் சார்ஜ் பாய்ண்டில் லாஸ்ட், ஃபவுண்ட் பட்டனும் கூட உண்டு. அதை அழுத்தினால் ரிமோட் அலற, கண்டுபிடித்துவிடலாம்.
அறையில் ரிமோட்டிற்கான சென்சார்களை பொருத்துவது அத்தியாவசியம். அப்போதுதான் வைஃபையில் இணைந்துள்ள சென்சார்களின் மூலமாக பொருட்களை எளிதாக ரிமோட் மூலம் இயக்க முடியும். அறையில் உள்ளே வரும்போது குறிப்பிட்ட லைட்கள் எரிந்தால் சூப்பராக இருக்குமே என சின்ன ஆசை முளைத்தால், அதற்கு செவன்ஹக்ஸ் ஸ்மார்ட் ரிமோட் ஆப் தேவை.
ஸ்மார்ட் ரிமோட் ஆப்பை தரவிறக்கி, போனில் பதிந்தபிறகு, அறையில் 2 மீட்டர் உயரத்தில் சுவரில் சென்சார்களைப் பதித்து, பொருட்களை போனில் தேர்வு செய்தால் போதும். இனி ரிமோட்டை கையிலெடுத்தால் ஆல் இன் ஆல் டெக்னோ அழகுராஜா நீங்கள்தான் என ஊரே உங்களைத்தான் புகழும்.
135 மி.மீ நீளமும், 41 மி.மீ அகலமும் கொண்ட ஸ்மார்ட் ரிமோட்டோடு, சார்ஜ் பேஸ், 3 ரூம் சென்சார்கள் உட்பட 10 ஆயிரத்து 156 ரூபாய்க்கு வாங்கி இஷ்டப்படி பொருட்களை ஒன் மேன் ஆர்மியாக கன்ட்ரோல் செய்து கலக்கலாம்.

கருத்துரையிடுக