இது என்ன மாயம், ரஜினிமுருகன், தொடரி, ரெமோ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். இதில் இது என்ன மாயம் படத்திற்கு பின்னர் அவர்
கமிட்டாகி நடித்த படம்தான் பாம்பு சட்டை. பாபி சிம்ஹா நாயகனாக நடித்துள்ளார். ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இழுபறியில் கிடந்த இந்த படம் சமீபத்தில்தான் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
மேலும், ஒரு புரட்சிகரமான இளைஞனாக பாபி சிம்ஹா நடித்துள்ள இந்த படத்தில் ஒரு எக்ஸ்போட்டில் வேலை செய்யும் ஏழை பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதுவரை அவர் நடித்து வெளியாகியுள்ள படங்களில் கலர்புல்லான காஸ்டியூம்களில் தோன்றியவர், இந்த படத்தில் ஏழ்மையை வெளிப்படுத்தும் பாவாடை தாவணி உடையணிந்து நடித்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ். அதோடு, சில காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் வகையிலும் நடித்துள்ளாராம். அதனால் இந்த பாம்பு சட்டை வந்தால் அவரது இன்னொரு பரிமாணத்தை காட்டும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.

கருத்துரையிடுக