சின்ன குஷ்புவாக வலம் வரும் ஹன்சிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக சின்ன குஷ்புவாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. விஜய், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்ட
பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவருக்கு தற்போது கைவசம் இரண்டு படங்கள் தான் உள்ளது. அதிலும் போகன் படம் முடிந்துவிட்டது. இன்னொருபடம் விரைவில் ஆரம்பமாக உள்ளது.
இதனிடையே சினிமா பிரபலங்கள் தற்போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதிலும் நடிகைகள் பற்றி சொல்லவே வேண்டாம். போட்டோக்கள், ரசிகர்களுடன் கலந்துரையாடல், படம் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் என பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் ஏராளமான ரசிகர்களும், நடிகர்களை சமூக வலைத்தளத்தில் பின்தொடருகின்றனர். நடிகை ஹன்சிகாவையும் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பேஸ்புக்கில் மட்டும் ஹன்சிகாவை 60 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹன்சிகா.

இதைப்பற்றி ஹன்சிகா கூறியதாவது... ‛‛பேஸ்புக்கில் என்னை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை தொட்டுள்ளது. தொடர்ந்து ஏராளமானபேர் பின் தொடருகின்றனர். ரசிகர்கள் மனதில் எனக்கும் இடம் இருப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க்கையில் நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு ரசிகர்களை சம்பாதித்தோம் என்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறியவர், ரசிகர்கள் தன்னை சின்ன குஷ்பு என்று அழைப்பதும் மகிழ்ச்சியை தருவதாக கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget