தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நவ்யா நாயர். தற்போது அவர் திருமணம் செய்து கொண்டு மும்பையில்
கணவருடன் வசித்து வருகிறார். கொச்சியில் நடக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று மும்பையிலிருந்து விமானம் மூலம் கொச்சி வந்தார். அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடந்த ஓட்டலுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் பைக்கில் வந்த ஒரு ஆணும், பெண்ணும் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த நவ்யா நாயர், காரை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவருடன் அவரும் சேர்ந்து இருவரையும் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டுக் காத்திருந்தார். விபத்தில் சிக்கிய ஆண் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை டாக்டர்கள் சொன்னதும் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார் நவ்யா. அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதுகுறித்து நவ்யா நாயர் கூறும்போது... "சாலை விபத்தில் மனித உயிர்கள் மலிவாக போய்கொண்டிருக்கிறது. அவர்களை காப்பாற்ற யாரும் முன்வருவதில்லை. நாமும் ஒரு நாள் விபத்தில் சிக்குவோம் என்று யாரும் நினைப்பதில்லை. மனிதர்களுக்கு மனிதர் உதவுவது அரிதாகிவிட்டது. நான் கடுமையாக போராடியும் ஒரு உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது" என்றார்.

கருத்துரையிடுக