சின்னத்திரை நாயகி ஸ்வேதா

சின்னத்திரை உலகில் பல சேனல்களில் டான்சராக, ஆங்கராக, நடிகையாக பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருந்தவர்
ஸ்வேதா. இரண்டு ஆண்டுகள் மேல்படிப்புக்காக பிரான்ஸ் சென்றிருந்த அவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். இதையடுத்து இரண்டு மெகா சீரியல்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தையில் உள்ளார்.

நாயகி ஸ்வேதா அளித்த பேட்டி...

நான் இரண்டரை வயதில் இருந்தே நடனம் கற்று வந்தேன். கேரளா பெண்ணாக இருந்தபோதும் கோயமுத்தூரில்தான் பிறந்து வளர்ந்தேன். 12 வருடமாக பரதநாட்டியம் பயின்ற பின்னர் மேற்கத்திய நடனம் பயின்றேன். நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். மீடியாக்களில் வரவேண்டும் என்ற ஆசைகூட எனக்கு அப்போது இருந்ததில்லை. நான் 6வது படித்தபோது தில்லானா தில்லானா -என்றொரு ஷோவில் டான்ஸ் பண்ணி முதல் பரிசு பெற்றேன். அதன்பிறகு தயா-2000 என்ற பெயரில் லதா ரஜினிகாந்த் மேடம் ஒரு ஷோ பண்ணினார்கள். அதில் ரஜினி விருது வாங்கினேன். பரதநாட்டியம், வெஸ்டர்ன், போக் என மூன்று நடனங்களையும் கலந்து நானே கம்போஸ் செய்த அந்த நிகழ்ச்சியில் நடனமாடினேன்.

பத்தாவது படித்தபோது சின்னத்திரையில் சூப்பர் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடனமாடினேன். எனது குடும்பத்தினர் பெரிய சப்போட்டீவாக இருந்ததால், கோவையில் இருந்து சென்னை வந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் ஆடினேன். விபிள் மிஸ் சின்னத்திரையில் டைட்டீல் வின் பண்ணினேன். பின்னர் விஜய் டிவியில் விஜேவாக, ஜீ தமிழில் அஞ்சறை பெட்டி, ஜோடி நம்பர்-ஒன் பண்ணினேன். அப்போது எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு, நான்கு மாதம் ஓய்வெடுத்தேன்.

அதன்பிறகு விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் திருமுருகன் இயக்கிய கார்த்திகை பெண்கள் சீரியலில் லீடு ரோலில் நடித்தேன். கல்கி படத்தில் ஸ்ருதி நடித்தது போன்று துறுதுறுவான வேடம். ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. அதன்பிறகு நான் வெளியில் எங்கு சென்றாலும் அந்த கேரக்டரின் வியூலா என்ற பெயரை சொல்லியே அழைத்தனர். விஷால் நடித்த சமர் படத்தில் அவரது தங்கையாக நடித்தேன். அதன்பிறகு, வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவு இருந்ததால் 2 ஆண்டு பிரான்ஸ் சென்று படித்தேன்.

திரும்பி வந்தபோது பெங்களூரில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் என்னைப்பார்த்த பலரும் நான் நடித்த சீரியல்களை சொல்லி என்னை அடையாளம் கண்டதோடு தொடர்ந்து நடியுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து ஜீ தமிழில் இருந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தனர். ரொம்ப சந்தோசமாயிடுச்சு. எங்கே விட்டேனோ அங்கேயிருந்தே மீண்டும் ஆரம்பித்தேன். இதுவரை 12 எபிசோடு முடித்து விட்டேன். ரஜினி ரவுண்டு, கமல் ரவுண்டு என ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவிதமாக ஆடினேன்.

இப்போது சீரியல் வாய்ப்பும் வருகிறது. கார்த்திகை பெண்கள் சீரியலில் போல்டான பெண்ணாக நடித்தேன். அதை பண்ணும்போது நிறையபேர் என்னை உதாரணமாக எடுத்தனர். நிஜ வாழ்க்கையிலும் நான் தைரியமான பெண். அந்த கேரக்டர் பண்ணும்போது இன்னும் வளர்த்துக்கொண்டேன். அதனால் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் கதைகளில் நிறைய நடிக்க ஆசைப்படு கிறேன். எனக்கு யாருமே ரோல் மாடல் கிடையாது. ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு நல்ல விசயங்களை கற்றுக்கொள்வேன். உதாரணத்திற்கு கல்கி ஸ்ருதி மேடத்தை சொல்லலாம். அவர்களிடமிருந்தும் பல விசயங்களை கற்றுக்கொண்டுள்ளேன்.

சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன். ஹீரோயின், சிஸ்டர் என எந்தமாதிரியான வேடம் கிடைத்தாலும் நடிப்பேன். மேலும், இப்போது இரண்டு மெகா தொடரில் நடிக்க பேசி வருகிறேன். ஆக, மீடியாதான் என் வாழ்க்கை என்றாகி விட்டது. அதனால் திருமணத்திற்கு முன்புவரை மீடியாவில் இருப்பேன். அதன்பிறகு புகுந்த வீட்டினர் சம்மதித்தால் தொடர்ந்து மீடியாவில் இருப்பேன். இல்லையேல் வேறுவிதமாக அப்போதைய சூழ்நிலைப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன். என்வாழ்க்கையில் எல்லா விசயங்களும் நான் நினைத்து பார்த்திராத வகையில் நடந்துள்ளது. ஆனால் எல்லாமே நல்லதாகவே நடந்துள்ளது. அதனால் அது இப்போது நடப்பது போன்று திருமணத்திற்கு பிறகும் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஸ்வேதா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget