சின்ன்த்திரையில் கலக்கும் குஷ்பு

மருமகள், ஜனனி, கல்கி, ருத்ரா என நெடுந்தொடர்களில் நடித்தவர் குஷ்பு. அதேபோல், கோடீஸ்வரி, ஜாக்பாட் போன்ற நிகழ்ச்சிகளை
தொகுத்து வழங்கியவர் சில ஷோக்களும் நடத்தி வருகிறார். அந்த வகையில, சிம்ப்ளி குஷ்பு உள்பட சில நிகழ்ச்சிகளில் பிரபலங்களை சந்தித்து பேட்டி கண்டவர், தற்போது நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது நந்தினி என்றொரு மெகா தொடரை தயாரித்து வருகிறார் குஷ்பு. இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சீரியல் ஒன்று நான்கு மொழிகளில் வெளியாவது இதுவே முதல்முறை என்கிறார்கள். மேலும், தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுக்கப்படும் இந்த தொடரை, தெலுங்கு, மலையாளத்தில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.

அது மட்டுமின்றி சமீபகாலமாக சினிமாவுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டு தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி நேயர்களை கவர்ந்து வருகிறது. அதனால் குஷ்புவும் தனது நந்தினி தொடரை இந்தி தொடர்களுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்தி சீரியல்களுக்கு இணையாக தமிழ் சீரியல்களை பிரமாண்டமாக தயாரிக்க யாரும் முயற்சிக்காத நிலையில், முதன்முறையாக குஷ்பு இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget