கெஸ்ட் ரோல் நாயகியான சிம்ரன்

1997ல் விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் அறிமுகமானவர் சிம்ரன். அந்த படத்தில் சிவாஜிகணேசன்-சரோஜாதேவியும் முக்கிய
வேடத்தில் நடித்தனர். அதன்பிறகு விஐபி, நேருக்குநேர் என அடுத்தடுத்து விஜய், அஜீத், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார் சிம்ரன். சில படங்களில் ஹோம்லியாக நடித்தபோதும் பல படங்களில் கிளாமர் ரோல்களில் நடித்து இளசுகளின் மனங்கவர் நாயகியாக திகழ்ந்தார்.

ஆனபோதும் எல்லா நடிகைகளையும் போலவே திருமணத்திற்கு பிறகு சிம்ரனின் கதாநாயகி இடம் பறிபோனது. ஆனால் சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தார். ஆஹா கல்யாணம், திரிஷா இல்லன்னா நயன்தாரா, கரையோரம் ஆகிய படங்களில் நடித்த சிம்ரன், தற்போது பார்த்திபன் இயக்கி நடித்துள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திலும் நடித்துள்ளார். ஆனால், முந்தைய படங்களில் நடித்தது போலவே இந்த படத்திலும் அவர் கெஸ்ட் ரோலில்தான் நடித்திருக்கிறார். ஆக, இந்த படம் சிம்ரன் நடிக்கும் 4வது கெஸ்ட் ரோல் படமாகும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget