ஸ்ரீதிவ்யா, ஆனந்தி, லட்சுமி மேனன் போன்றவர்கள் பாவாடை தாவணியிலிருந்து விடுபட்டு மார்டன் உடைக்கு திரும்ப முயற்சித்துக்
கொண்டிருக்கும்போது பிரியா ஆனந்த் பாவாடை தாவணிக்கு திரும்ப ஆசைப்படுகிறார். அவர் நடித்து வரும் முத்துராமலிங்கம் படத்தில் முதன் முறையாக பாவாடை தாவணி அணிந்து நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் அக்மார்க்க மாயவரத்து பொண்ணு. பாவாடை தாவணி எனக்கு பிடித்த உடை. ஊருக்கு செல்லும்போதெல்லாம் பாவாடை தாவணியில்தான் திரிவேன். குடும்ப விழா என்றால் மட்டுமே சேலை அணிவேன். இது வரை நான் நடித்த படங்களில் பாவாடை தாவணி அணிந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது முத்துராமலிங்கம் படத்தில் படம் முழுக்க பாவாடை தாவணி அணிந்து பக்கா கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். குறிப்பாக சிலம்ப சண்டையும் போடுகிறேன். காதல் சண்டையும் போடுகிறேன்.
இந்தப் படத்திற்கு கவுதம் கார்த்திக்தான் என்னை சிபாரிசு பண்ணினார் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. யாரும் சிபாரிசு செய்து வாய்ப்பு பெறும் நிலையில் நான் இல்லை. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே கார்த்தி சார் குடும்பம் எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமானது. கவுதமுடன் சின்ன வயதிலிருந்து நட்புடன் பழகி வருகிறேன். என்கிறார் பிரியா ஆனந்த்.

கருத்துரையிடுக