சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையான ஸ்ரேயாவினால் நீண்டகாலம் தனது மார்க்கெட்டை தக்க
வைத்துக்கொள்ள முடியவில்லை. அதன்பிறகு அவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் திடீரென காணாமல் போய் விட்டார் ஸ்ரேயா. ஆனபோதும், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தபடி மார்க்கெட்டில் விடாப்பிடியாக இருந்து வந்த ஸ்ரேயா, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் மூன்று சிம்புகளில் ஒருவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும், அந்த படம் திரைக்கு வரும்போது தனக்கு புதிய படவாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி உள்பட சில படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் ராய் லட்சுமி, அருந்ததிநாயர் ஆகியோரும் நடிக்கிறார்கள். மூன்று பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது.
இந்த படத்தில் ஸ்ரேயா மெச்சூரிட்டியான ஒரு வேடத்தில் நடிக்கிறாராம். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150, கவுதமிபுத்ரா சட்டகமி போன்ற படங்களில் நடிக்கும் ஸ்ரேயாவுக்கு தெலுங்கில் ஓரளவு மார்க்கெட் இருந்து வருகிறது. அதை முன்வைத்துதான் இந்த படத்திற்கு அவரை புக் பண்ணியிருக்கிறார்கள்.

கருத்துரையிடுக