ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக
எம் மனசு தங்கம் படத்தில் நடித்து வருகிறார். மதுரை பெண்ணாக இருந்தாலும் துபாயில் பிறந்து வளர்ந்தவர். மாடல், பிட்னஸ் பயிற்சியாளர், கிக் பாக்சர், ரெஸ்ட்லிங் அனைத்தும் கற்றவர். சினிமா ஆசையில் எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு நடிக்க வந்து விட்டார்.
நிவேதாவின் இன்னொரு முகம் நல்ல ஓவியர். இந்த ஓவியத்தோடு ஒரு அபூர்வ சக்தியும் அவருக்கு இருக்கிறது. அவரது கனவில் நடக்கும் சில விஷயங்களை படமாக வரைந்து வைப்பாராம். அந்த நிகழ்ச்சி 6 மாதத்துக்குள்ளோ ஒரு வருடத்துக்குள்ளோ நடந்து விடுமாம். சுனாமி வருதற்கு ஒரு வருடம் முன்பே கனவு கண்டு வரைந்து வைத்திருந்தாராம். தற்போதும் இதுபோல நிறைய கனவுகள் கண்டு அதனை படமாக வைத்து வைத்திருக்கிறாராம். ஒரு வேளை கனவு கண்டது நிஜத்தில் நடக்காவிட்டாலும் சினிமாவில் காட்சியாகவாவது பார்த்து விடுவாராம். கனவுகள் பெரும்பாலும் இயற்கையோடு தொடர்புடையதாகத்தான் இருக்குமாம். இந்த அனுபவங்களை புத்தகமாக எழுதி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

கருத்துரையிடுக